Actor Subramani : பிரபல தமிழ் நடிகர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Actor Subramani : பிரபல தமிழ் நடிகர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Published on: April 24, 2025 at 4:16 pm
சென்னை ஏப்ரல் 24 2025: பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் வேலை செய்தவர் சுப்பிரமணி. என் நாட்களில் இவர் நடிகராக சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்தார். இவரின் நடிப்புக்கு பரியேறும் பெருமாள், ஜெய் பீம், கூர்க்கா மற்றும் பிசாசு உள்ளிட்ட பல்வேறு படங்கள் புகழ் சேர்த்தன. இந்த நிலையில் துணை நடிகராக இவர் மிகப்பெரிய அளவில் அறியப்பட்டார்.
இதற்கிடையில் இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தற்போது நடிகர் சுப்பிரமணிக்கு புற்றுநோய் நான்காம் கட்டப் பாதிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, நடிகர் சுப்பிரமணி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
நடிகர் சுப்பிரமணியன் அவரது மனைவி ராதா உடனிருந்து கவனித்து வருகிறார். நடிகர் சுப்பிரமணி வறுமையில் வாழும் நிலையில், அவருக்கு நடிகர் நடிகைகள் உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஒரு அம்மா ஆக.. நடிகை ரம்பா கொடுத்த பதில்.!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com