Actor Soori wish: ஜல்லிக்கட்டு தொடர்பான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என சூரி தெரிவித்துள்ளார்.
Actor Soori wish: ஜல்லிக்கட்டு தொடர்பான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என சூரி தெரிவித்துள்ளார்.

Published on: January 16, 2026 at 4:43 pm
மதுரை ஜனவரி 16, 2026; மதுரை பாலமேட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றன. இந்த போட்டியில் இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் நடிகர் சூரி வளர்த்துள்ள காளை மாடு ஒன்றும், கலந்து கொண்டது. இந்த காளையை மாட்டை இளைஞர் ஒருவர் அடக்கினார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சூரி, ” ஜல்லிக்கட்டு போன்ற கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிக்க மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன்” என்பதை தெரிவித்தார்.
மேலும் தமக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கு கொள்ள ஆர்வம் இருக்கிறது என்பதை தெரிவித்த சூரி, துணை முதலமைச்சர் உதயநிதி உடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்த்தது மிகுந்த சிறப்பான அனுபவம் என்றார்.
முன்னதாக தன்னிடம் பல்வேறு ஜல்லிக்கட்டு காளைகள் இருப்பதாக கூறிய நடிகர் சூரி, தனது நண்பர்கள் பலரும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகின்றனர் என்பதையும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: பிரபாஸின் தி ராஜா சாப் படுதோல்வி? ஒரு வார கலெக்ஷன் இவ்வளவுதானா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com