Actor Sivarajkumar: நான் கர்நாடகாக்காரன் என்றாலும் சென்னையில் தான் பிறந்தேன்; கல்லூரி படிக்கும் காலங்களில் அரசு பேருந்தில் பயணித்தேன் என நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
Actor Sivarajkumar: நான் கர்நாடகாக்காரன் என்றாலும் சென்னையில் தான் பிறந்தேன்; கல்லூரி படிக்கும் காலங்களில் அரசு பேருந்தில் பயணித்தேன் என நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
Published on: April 17, 2025 at 11:39 am
சென்னை ஏப்ரல் 17 2025: கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களாக நடிகர் சிவ ராஜ்குமார் மற்றும் உபேந்திரா உள்ளிட்டவர் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து 45 என்ற படத்தில் நடித்துள்ளனர்.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் சென்னைக்கும் தனக்குமான தொடர்பு குறித்து பேசினார்.
இது குறித்து பேசிய சிவராஜ் குமார், ” நான் கர்நாடகக்காரன் என்றாலும் சென்னையில் தான் பிறந்தேன்; சென்னையில் தான் படித்தேன். எனக்கும் சென்னைக்கும் அப்படி ஒரு உறவு உண்டு. கல்லூரி படிக்கும் காலங்களில் 12B, 25C உள்ளிட்ட அரசு பேருந்துகளில் பயணித்துள்ளேன். இந்த வகையில் சென்னையை எனக்கு எப்போதும் மறக்க முடியாது” என்றார்.
தொடர்ந்து தனது மனைவி குறித்து பேசிய நடிகர் சிவராஜ்குமார், ” சென்னையில் எனக்கு பிடித்த இடம் மெரினா. சென்னை வரும்போதெல்லாம் நான் மெரினா வருவேன். இங்கு பல சுவாரஸ்யமான நினைவுகள் எனக்கு உண்டு; என் மனைவிக்கு இங்குள்ள பஜ்ஜி மிகவும் பிடிக்கும்” என்றார்.
வெற்றி தோல்வி..
நடிகர் சிவராஜ்குமார் சினிமாவிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுகுறித்து பேசிய அவர், ” நான் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து 40 ஆண்டுகள் கடந்து விட்டது; நிறைய வெற்றிகள் தோல்விகளை பார்த்து விட்டேன். எதையும் மண்டையில் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அனைத்தையும் சரி சமமாக பார்க்கும் மனநிலை எனக்கு வந்துவிட்டது” என்றார்.
புற்றுநோய் பற்றி..
நடிகர் சிவராஜ்குமார் புற்றுநோயால் அவதிபட்டார். இது தொடர்பாக பேசிய அவர், ” உடல் ரீதியாக நான் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளேன்; தற்போது புற்றுநோயிலிருந்து விடுபட்டுள்ளேன்” என்றார்.
இதையும் படிங்க: அசோக வனத்தில் சீதை சாய் பல்லவி: ராமாயண படப்பிடிப்பு விறுவிறுப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com