‘Unaccustomed Earth’ என்ற ஆங்கில வெப்சீரிஸில் நடிகர் சித்தார்த் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
‘Unaccustomed Earth’ என்ற ஆங்கில வெப்சீரிஸில் நடிகர் சித்தார்த் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Published on: September 16, 2025 at 1:45 pm
Updated on: September 16, 2025 at 1:46 pm
சென்னை, செப்.16, 2025: ஜூம்பா லஹிரியின் விருது பெற்ற சிறுகதைத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்ட தொடர் ‘அன்அகஸ்டம்டு எர்த்’ என்ற வெப்சீரிஸ் அறிமுகமாக உள்ளது.
இதில், ரசிகர்களின் விருப்பமான பாய்ஸ், ரங் தே பசந்தி மற்றும் பொம்மரில்லு உள்ளிட்ட பல படங்களில் நடித்த சித்தார்த்தும் நடிக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் எட்டு அத்தியாயங்களில் ஃப்ரீடா பிண்டோவுடன் (ஸ்லம்டாக் மில்லியனர்) இணைந்து இவர் நடிக்கிறார்.
தி பிட்டின் ஜான் வெல்ஸ் மற்றும் 3 பாடி ப்ராப்ளமின் மாதுரி சேகரின் இந்தத் தொடர், காதல், விருப்பம் மற்றும் உறவுகளை வழிநடத்தும் இறுக்கமான இந்திய அமெரிக்க சமூகத்தைப் பற்றிய ஒரு காவிய படைப்பாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்தார்த் கடைசி தமிழ் படம் 3BHK
நடிகர் சித்தார்த் சமீபத்தில் 3BHK படத்தில் நடித்தார். இந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான இந்தப் படத்தில் சித்தார்த் பிரபு என்ற கதாபாத்திரத்தில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராக நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா ஜே ஆச்சார் மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரூ.1.65 கோடி தாரேன் என்றாங்க.. ஆனாலும் நான் மசியல.. பிரபல நடிகை ஓபன் டாக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com