நடிகர் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on: September 3, 2024 at 8:13 pm
Updated on: September 3, 2024 at 9:11 pm
Actor Nivin Pauly | மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், நடிகர் நிவின் பாலி மீது ஜாமினில் வெளியே வரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் நிவின் பாலி மீது இளம்பெண் ஒருவர் எர்ணாக்குளம் ஊனுக்கல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், “படவாய்ப்பு தருவதாக கூறி நிவின் பாலி, வெளிநாட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்தார்” எனத் தெரிவித்து இருந்தார்.
இதன் பேரில் நடிகர் நிவின் பாலி மீது ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தற்போது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து, பாலியல் புகாரில் பல்வேறு நடிகர்கள் சிக்கிவருகின்றனர். நடிகரும் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீதும் பாலியல் புகார்கள் கூறப்பட்டுள்ளன. இதேபோல் நடிகர் சித்திக் மற்றும் ஜெய சூர்யா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது பாலியல் புகார் பதியப்பட்டுள்ள வழக்கில் நிவின் பாலி 6வது குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. 2010ல் மலையாள சினிமாவில் அறிமுகமான நிவின் பாலி, நேரம், பிரேமம், பெங்களூரு டேஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
நிவின் பாலி அறிக்கை
இந்த நிலையில் நிவின் பாலி ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன்” எனவும் கூறியுள்ளார்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com