Actor Krishna arrested: போதைப் பொருள் பயன்பாடு வழக்கில் நடிகர் கிருஷ்ணா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Actor Krishna arrested: போதைப் பொருள் பயன்பாடு வழக்கில் நடிகர் கிருஷ்ணா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Published on: June 26, 2025 at 8:08 pm
சென்னை, ஜூன் 26 2025: ஆப்பிள் பெண்ணே நீ யாரோ என ரோஜாக் கூட்டம் என்ற படத்தின் மூலமாக பிரபலமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவர், போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இந்த வழக்கில் இவர் பெயர் அடிபட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணா கேரளத்தில் ஷூட்டிங்கில் இருந்தார்.
இந்த நிலையில் அவரை தமிழ்நாடு வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும், சென்னையில் உள்ள நடிகர் கிருஷ்ணாவின் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
இந்த நிலையில் நடிகர் கிருஷ்ணா இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டார். முன்னதாக, போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில் நடிகர் கிருஷ்ணாவின் வீட்டில் போலீசார் கிட்டத்தட்ட 2 மணி நேரம் வரை சோதனை நடத்தினார்கள்.
சென்னை பெசண்ட் நகரில் உள்ள நடிகர் கிருஷ்ணாவின் வீட்டில் இந்தச் சோதனை நடைபெற்றது. நடிகர் ஸ்ரீகாந்த் கைதை தொடர்ந்து, நடிகர் கிருஷ்ணாவிடம் கிட்டத்தட்ட 24 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க நடிகர் ஸ்ரீகாந்த் கைது.. அடுத்து யார்? கலகலக்கும் கோடம்பாக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com