நடிகை சில்க் ஸ்மிதாவிடம் பழகினால் காம எண்ணங்கள் வராது என நடிகர் ஜி எம் குமார் தெரிவித்துள்ளார்.
நடிகை சில்க் ஸ்மிதாவிடம் பழகினால் காம எண்ணங்கள் வராது என நடிகர் ஜி எம் குமார் தெரிவித்துள்ளார்.
Published on: February 23, 2025 at 9:37 pm
1990 காலகட்டங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இவர் ஓர் சிறந்த நடிகை என இன்று அளவு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார். இவர் தனது தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் நடிகை சில்க் ஸ்மிதா குறித்து நடிகர் ஜி எம் குமார் சில தகவல்களை பகிர்ந்து உள்ளார்.
பதில் நடிகை சில்க் ஸ்மிதா ஒரு உன்னதமான பெண்மணி; அவரிடம் இருக்கும் திறமைகளை வார்த்தையால் கூற முடியாது என நெகிழ்ந்தார்.
இது குறித்து பேசிய ஜி எம் குமார், ” நடிகை சில்க் சுமிதாவின் மறைவிற்குப் பிறகு கவர்ச்சியான நடிகைகள் என்று யாரையும் என்னால் சொல்ல முடியாது.
OTT-க்கு வந்த லால் சலாம்.. ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
சில்க் ஸ்மிதா ஒரு உன்னதமான பெண்; மிகப்பெரிய அளவிலான திறமைகள் அவரிடம் காணப்பட்டன. அவர் எங்கள் வீட்டுக்கு வருவார். தொலைக்காட்சி பார்ப்பார்.
எங்கள் வீட்டில் அவர் சாப்பிட்டு உள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து கிளம்பி விடுவார்.
இன்றைய காலகட்டத்தில் கூட சில்க் ஸ்மிதாவிற்கு நிகரான ஓர் நடிகையை பார்க்க முடியவில்லை. யாரோ ஒரு பெண்ணைக் கூட்டி வந்து கவர்ச்சி நடனம் என ஆட வைக்கிறார்கள். ஆனால் சில்க் ஸ்மிதா இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்.
அவரிடம் பேசினால் அவர் குறித்த எண்ணம் நமக்கு மாறும்; காம எண்ணங்கள் வரவே வராது. அவர் ஒரு மிகச் சிறந்த பெண்மணி” என தெரிவித்துள்ளார்.
நடிகை சில்க் ஸ்மிதா ரஜினிகாந்த் கமல்ஹாசன் என முன்னணி நடிகர்கள் மட்டுமின்றி பல்வேறு முதன்மை கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
இவர் தனது கண்களால் கூட நடிப்பு திறமையை வெளிப்படுத்தக் கூடியவர். இவரின் மரணம் திரைத்துறைக்கு இன்றளவும் பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க அதை தொடாமல் மூன்று நாட்கள்.. ரொம்ப ரொம்ப கஷ்டம்.. மனம் திறந்த சமந்தா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com