Actor Cool Suresh: கமல்ஹாசன் விண்வெளி நாயகனாக மாறிவிட்டார்; இனி இவர்தான் உலகநாயகன்.. இவரை உலக நாயகன் என்றுதான் அழைக்க வேண்டும் என கூல் சுரேஷ் சமீபத்தில் பேசியது வைரல் ஆகி வருகிறது.
Actor Cool Suresh: கமல்ஹாசன் விண்வெளி நாயகனாக மாறிவிட்டார்; இனி இவர்தான் உலகநாயகன்.. இவரை உலக நாயகன் என்றுதான் அழைக்க வேண்டும் என கூல் சுரேஷ் சமீபத்தில் பேசியது வைரல் ஆகி வருகிறது.
Published on: May 29, 2025 at 4:05 pm
சென்னை மே 29 2025: மணிரத்தினம் கமல்ஹாசன் கூட்டணியில் தக் லைஃப் திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி உள்ளது. இந்த படத்தில் நாயகிகளாக நடிகை திரிஷா மற்றும் அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நடிகை திரிஷாவுடன் கமல்ஹாசன் ரொமான்ஸ் காட்சியில் தோன்றுகிறார். அத்துடன் நடிகை அபிராமி உடனும் லிப் லாக் காட்சியில் நடித்துள்ளார். மேலும் படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தோன்றும் காட்சிகள் அழுத்தமாக உள்ளன எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், படத்தின் படவிழாவில் நடிகர் கமல்ஹாசனை பலரும் போற்றி பேசினார்கள். அவரை சிலர் விண்வெளி நாயகன் என கூறினார்கள். கமல்ஹாசன் உலக நாயகன் என்ற பட்டத்தை ஏற்கனவே துறந்துவிட்டார். இதற்கிடையில் கமல்ஹாசன் விண்வெளி நாயகனாக உயர்ந்து விட்டார் இனி சிம்பு தான் உலக நாயகன் என கூறியுள்ளார் நடிகர் கூல் சுரேஷ்.
சிம்பு தான் உலக நாயகன்
இதுகுறித்து பேசிய அவர், ” கமல்ஹாசன் விண்வெளி நாயகனாக உயர்ந்து விட்டார்; இனி சிம்பு தான் உலகநாயகன். அவரை அப்படித்தான் அழைக்க வேண்டும் என கூறியுள்ளார். நடிகர் கூல் சுரேஷின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் நடிகர் கமல்ஹாசனின் ரசிகர்களும் இந்த பேச்சைக் கண்டித்துள்ளனர். சிலர் இதில் தவறு ஏதுமில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க நடிகரான பின்பு செய்த தவறு.. விஜய் ஆண்டனி குறிப்பிட்ட விஷயம்.!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com