Dadasaheb Phalke Award: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுக்கு 71வது தேசிய திரைப்பட விழாவில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Dadasaheb Phalke Award: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுக்கு 71வது தேசிய திரைப்பட விழாவில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Published on: September 23, 2025 at 9:40 pm
டெல்லியில் இன்று (செப்.23, 2024) நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகளில் மலையாள நட்சத்திரம் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சய் ஜாஜு, மோகன் லாலின் புனைப்பெயரான ‘லாலேட்டன்’ எனக் கூறி நட்சத்திரத்தை அன்புடன் அறிமுகப்படுத்தினார். இதனால் மகிழ்ந்த மோகன் லாலின் ரசிகர்கள், அந்த வீடியோவை ஆன்லைனில் வைரலாக்கி வருகின்றனர்.
விருது வழங்கும் விழாவில் மோகன்லாலை அறிமுகப்படுத்திய சஞ்சய், “இந்த மாலை ஜாம்பவான்களுக்கும், முதல்வர்களுக்கும் உரியது. பத்ம பூஷண் ஸ்ரீ மோகன்லால் ஜி தாதாசாகேப் பால்கே விருதுடன் கௌரவிக்கப்படுகிறார்” என்றார்.
மேலும், “நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக, அவர் திரையில் சிப்பாய், கவிஞர், அண்டை வீட்டார், ராஜா என மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் இடம் பிடித்துள்ளார். சினிமா என்பது வெறும் நடிப்பு மட்டுமல்ல, அது பணிவு மற்றும் சேவையும் கூட என்பதை அவர் நமக்குக் காட்டுகிறார்” என்றார்.
யார் இந்த மோகன் லால்?
நடிகர் மோகன்லால், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பல படங்களில் பணியாற்றியுள்ளார். இவர், 1980 இல் மஞ்சில் விரிஞ்சா பூக்கள் என்ற படத்தில் அறிமுகமானார்.
அந்தப் படத்தில் அவர் வில்லனாக நடித்தார். இந்த ஆண்டு அவர் L2 எம்புரான் மற்றும் துடாரம் ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்தன. மோகன் லால் மொத்தம் 5 தேசிய விருதுகள் வென்றுள்ளார். விரைவில் த்ரிஷ்யம் 3, பேட்ரியாட், விருஷபா, பா பா பா மற்றும் ராம் ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க பூடான் டூ இந்தியா வரும் சொகுசு கார்கள்.. பிரித்வி ராஜ், துல்கர் சல்மான் வீடுகளில் ரெய்டு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com