Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி தினமான நாளை (பிப்.26, 2025) வங்கிகள் எங்கெங்கு செயல்படாது? தமிழ்நாட்டில் வங்கிகள் செயல்படுமா?
Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி தினமான நாளை (பிப்.26, 2025) வங்கிகள் எங்கெங்கு செயல்படாது? தமிழ்நாட்டில் வங்கிகள் செயல்படுமா?
Published on: February 25, 2025 at 7:24 pm
தமிழ்நாட்டில் வங்கிகள் விடுமுறை: மகா சிவராத்திரி புதன்கிழமை (பிப்ரவரி 26, 2025) அன்று வருகிறது. மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வங்கி விடுமுறை நாட்காட்டியில், இந்த நாள் ‘நியமனச் சட்டத்தின் கீழ் விடுமுறை’ பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், தனியார் மற்றும் பொது வங்கிகளும் புதன்கிழமை (பிப்.26, 2025) மூடப்படும். இருப்பினும், இது ஒரு தேசிய விடுமுறை அல்ல என்பதால், பல மாநிலங்களில் உள்ள வங்கிகள் வழக்கம் போல் செயல்படும்.
எந்தெந்த நகரங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்?
இதற்கிடையில், மகாசிவராத்திரியை முன்னிட்டு அகமதாபாத், ஐஸ்வால், பேலாபூர், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், டேராடூன், ஆந்திரா, தெலுங்கானா, ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, லக்னோ, மும்பை, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வங்கிகள்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வங்கிகள் நாளை (பிப்.26, 2025) வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழ்நாட்டில் பிப்.11ஆம் தேதி தை பூசம் தினத்தில் சென்னை உள்பட தமிழ்நாட்டில் வங்கிகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : போஸ்ட் ஆபீஸ் புதிய திட்டம்: ₹.1000 முதலீடு பண்ணுங்க; ₹.1 லட்சம் பெறுங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com