Ashwini Vaishnaw: இந்தியாவின் மின்னணு உற்பத்தியில் உலகளாவிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்தார். மேலும், “மின்னணு பொருட்கள் இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி பிரிவாக உயர்ந்துள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
Ashwini Vaishnaw: இந்தியாவின் மின்னணு உற்பத்தியில் உலகளாவிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்தார். மேலும், “மின்னணு பொருட்கள் இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி பிரிவாக உயர்ந்துள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.

Published on: December 29, 2025 at 4:45 pm
புதுடெல்லி, டிச.29, 2025: மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “இந்தியாவின் மின்னணு உற்பத்தியில் உலகளாவிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
இது குறித்து அவர் பேசுகையில், “மின்னணு பொருள்கள் தற்போது இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி பிரிவாக உயர்ந்துள்ளன; 7-வது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தி நாடாக உள்ளது என்றும், இந்த வளர்ச்சி பிரதமர் நரேந்திர மோடியின் முழுமையான சூழலை உருவாக்கும் பார்வையால் முன்னெடுக்கப்படுகிறது” என்றார்.
மேலும், “பெரிய அளவிலான மின்னணு உற்பத்திக்கான PLI திட்டம் (LSEM) ரூ.13,475 கோடி முதலீட்டை ஈர்த்து, 9.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தியை சாதித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 1.3 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கிய இந்த திட்டம், உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியை பெரிதும் ஊக்குவித்துள்ளது” என்றார்.
வேலை வாய்ப்புகள்
தொடர்ந்து, “மின்னணு கூறு உற்பத்தி திட்டம் இந்த மாற்றத்தை ஆதரிக்கிறது. 249 விண்ணப்பங்கள் மூலம் 1.15 லட்சம் கோடி ரூபாய் முதலீடு, 10.34 லட்சம் கோடி ரூபாய் உற்பத்தி, 1.42 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் மின்னணு உற்பத்தி 25 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இது அடிப்படை மட்டத்தில் உண்மையான பொருளாதார வளர்ச்சியை பிரதிபலிக்கிறது” என்றார்.
இதையடுத்து, மேக் இன் இந்தியா முயற்சியின் தாக்கத்தை எடுத்துக்காட்டிய அவர், தயாரிப்பு மற்றும் கூறுகளில் உற்பத்தி அதிகரித்து வருகிறது, ஏற்றுமதி உயர்ந்து வருகிறது, உலகளாவிய நிறுவனங்கள் நம்பிக்கையுடன் செயல்படுகின்றன” என்றார்.
இதையும் படிங்க : இந்தியாவில் தங்கம், வெள்ளி புதிய உச்சம்.. என்ன காரணம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com