Share Market News Today | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகளான பி.எஸ்.இ சென்செக்ஸ் மற்றும் என்.எஸ்.இ நிஃப்டி-50 உயர்வில் நிறைவு செய்தன.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Share Market News Today | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகளான பி.எஸ்.இ சென்செக்ஸ் மற்றும் என்.எஸ்.இ நிஃப்டி-50 உயர்வில் நிறைவு செய்தன.
Published on: September 26, 2024 at 4:12 pm
Share Market News Today | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்றைய வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன. தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 211.90 புள்ளிகள் அல்லது 0.81% அதிகரித்து 26,216.05 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 666.25 புள்ளிகள் அல்லது 0.78% உயர்ந்து 85,836.12 ஆகவும் காணப்பட்டது.
லார்ஜ்-கேப் மற்றும் மிட்-கேப் பங்குகளின் லாபத்துடன் காணப்பட்டன. வங்கி நிஃப்டி குறியீடு 147.85 புள்ளிகள் அல்லது 0.36% உயர்ந்து 52,841.25-ல் முடிந்தது.
உலோகம் மற்றும் ஆட்டோ பங்குகள் மற்ற துறை குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன. அதே நேரத்தில் பார்மா பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
பங்குகள் நிலவரம்
தேசிய பங்குச் சந்தையில், மாருதி (4.68%), மஹிந்திரா & மஹிந்திரா (எம்&எம்) (3.23%), கிராசிம் (3.17%), டாடா மோட்டார்ஸ் (2.98%), மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் (2.95%) உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.
மறுபுறம், சிப்லா 1.47%, எல்&டி 0.76%, ONGC 0.59%, ஹீரோ மோட்டோகார்ப் 0.48%, மற்றும் திவி லேப் 0.36% சரிந்தன.
தங்கம் விலை
இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை செப்டம்பர் 26 அன்று 10 கிராமுக்கு ரூ.75,510 ஆக இருந்தது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,551 ஆக உள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.69,218 ஆக இருந்தது.
எம்சிஎக்ஸ் ஃபியூச்சர்ஸ்
அக்டோபர் 2024 இல் காலாவதியாகும் தங்க எம்.சி.எக்ஸ் எதிர்கால ஒப்பந்தங்கள் 10 கிராமுக்கு ரூ. 48 குறைந்து ரூ.75265 என குறிப்பிடப்பட்டுள்ளது. மறுபுறம், எம்.சி.எக்ஸ் ஃப்யூச்சர்களில் டிசம்பர் 2024 காலாவதியாகும் வெள்ளிக்கான எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு கிலோ ரூ. 92,041 ஆக வர்த்தகம் செய்யப்பட்டு, ரூ. 352 சரிந்தது.
இதையும் படிங்க : ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 7.75% வரை ரிட்டன்: வட்டியை உயர்த்திய 5 வங்கிகள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com