SBI predicts India’s Economy: இந்தியாவின் பொருளாதாரம் Q3-இல் 8.1% வளர்ச்சி கண்டிருக்கலாம் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI predicts India’s Economy: இந்தியாவின் பொருளாதாரம் Q3-இல் 8.1% வளர்ச்சி கண்டிருக்கலாம் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: February 26, 2026 at 11:10 am
சென்னை, பிப்.26, 2026: நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 8.1 சதவீதம் வளர்ச்சி கண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று இந்திய ஸ்டேட் வங்கி செவ்வாய்க்கிழமை (பிப்.24, 2026) வெளியிட்ட ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், “2025 டிசம்பர் 31-இல் முடிவடைந்த காலாண்டில் பொருளாதார செயல்பாடுகள் உறுதியுடன் நீடித்ததாகக் காட்டுகின்றன. உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், பொருளாதாரம் வலுவான வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிராமப்புற நுகர்வு விவசாய மற்றும் விவசாயத்துக்கு அப்பாற்பட்ட துறைகளில் ஊக்கமளிக்கும் போக்குகளால் வலுவாகவே உள்ளது. நகர்ப்புற நுகர்வு கடந்த பண்டிகைக் காலத்திலிருந்து நிலையான உயர்வைச் சந்தித்துள்ளதாகவும், அது நிதி ஊக்கத்தால் ஆதரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
இந்த மதிப்பீடு, இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) அடிப்படை ஆண்டை 2011-12 இலிருந்து 2022-23 ஆக மாற்றத் தயாராக இருக்கும் நேரத்தில் வந்துள்ளது. புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 2026 பிப்ரவரி 27 அன்று வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Visit Malaysia Year 2026.. இந்தியாவுடன் உறவை வலுப்படுத்தும் மலேசியா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com