Pramit Jhaveri to Tata Trusts: பிரமித் ஜாவேரி தனது பதவிக்காலம் முடிந்த நிலையில், டாடா டிரஸ்ட்ஸிலிருந்து விலகுகிறார். அவர் 2020 பிப்ரவரி 12 முதல் சர் தோராப்ஜி டாடா டிரஸ்ட் (SDTT) நிர்வாகியாக பணியாற்றி வந்தார்.
Pramit Jhaveri to Tata Trusts: பிரமித் ஜாவேரி தனது பதவிக்காலம் முடிந்த நிலையில், டாடா டிரஸ்ட்ஸிலிருந்து விலகுகிறார். அவர் 2020 பிப்ரவரி 12 முதல் சர் தோராப்ஜி டாடா டிரஸ்ட் (SDTT) நிர்வாகியாக பணியாற்றி வந்தார்.

Published on: January 31, 2026 at 11:18 pm
Updated on: January 31, 2026 at 11:19 pm
புதுடெல்லி, பிப்.1, 2026: பிரமித் ஜாவேரி தனது பதவிக்காலம் முடிந்த நிலையில், டாடா டிரஸ்ட்ஸிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இவர் 2020 பிப்ரவரி 12 முதல் சர் தோராப்ஜி டாடா டிரஸ்ட் (SDTT) நிர்வாகியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், 2026 பிப்ரவரி 11 அன்று அவரது தற்போதைய பதவிக்காலம் முடிவடைகிறது. அதன்பின் மறுபடியும் நியமிக்கப்பட வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், நோயல் டாடாவுடன் சில நாட்களுக்கு முன் இதை விவாதித்ததாகக் கூறியுள்ளார். இது தனிப்பட்ட விருப்பம் எனத் தெரிவித்துள்ள ஜாவேரி, “டாடா டிரஸ்ட்ஸில் நிர்வாகியாக பணியாற்றியது பெருமை. எதிர்காலத்தில் டிரஸ்ட்ஸுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.” எனவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரமித் ஜாவேரி, சிட்டிபாங்க் இந்தியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் ஆவார்.
இவர் ஜனவரி 31 அன்று எழுதியுள்ள கடிதத்தில், சில நாள்களுக்கு முன் நோயல் டாடாவுடன் இந்த விஷயத்தை விவாதித்ததாகவும், தற்போது அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com