PM RAHAT Scheme: சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ₹1.5 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை வழங்கப்படுகிறது. இத்திட்டம்தான், பிரதமர் ரஹத் ஸ்கீம் ஆகும்.
PM RAHAT Scheme: சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ₹1.5 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை வழங்கப்படுகிறது. இத்திட்டம்தான், பிரதமர் ரஹத் ஸ்கீம் ஆகும்.

Published on: February 18, 2026 at 7:55 pm
புதுடெல்லி, பிப்.18, 2026: பிரதமர் ரஹத் திட்டம், சாலை விபத்துக்குள்ளானவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி கிடைக்கச் செய்வதோடு, நிதி சுமையை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ₹1.5 லட்சம் வரை பணமில்லா (cashless) சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும், விபத்துக்குப் பிறகு 7 நாட்கள் வரை சிகிச்சை செலவுகள் காப்பீட்டில் அடங்கும்.
யார் விண்ணப்பிக்கலாம்?
இத்திட்டத்தில் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில், அவசர சிகிச்சை, மருத்துவ செலவுகள், மற்றும் விபத்துக்குப் பிறகு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படும். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் ஆன்லைன் க்ளைம் செயல்முறைகள் மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிங்க: தங்கத்தின் விலை 0.5 சதவீதம் சரிவு.. வெள்ளி 1.70% வீழ்ச்சி!
இந்தியாவில் சாலை விபத்துகள்
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவில் சாலை விபத்து உயிரிழப்புகள் பதிவாகின்றன. இது குறித்து அமைச்சகம் சார்பில் முன்னதாக வெளியான அறிக்கையில், “சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முதல் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால், உயிரிழப்புகளில் சுமார் 50% தவிர்க்கப்படலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இத்திட்டத்தின் மூலம், அவசர சிகிச்சையின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது. விபத்துக்குப் பிறகு உடனடியாக மருத்துவ உதவி கிடைத்தால், பல உயிர்களை காப்பாற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: எப்போது வரும் போன்பே ஐ.பி.ஓ பங்குகள்? முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com