Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி, வலுவான பொருளாதாரத்துடன் இந்தியா உலகிற்கு நம்பிக்கையின் ஒளிக்கோபுரமாகத் தொடர்ந்து விளங்குகிறது என்று தெரிவித்துள்ளார்.
Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி, வலுவான பொருளாதாரத்துடன் இந்தியா உலகிற்கு நம்பிக்கையின் ஒளிக்கோபுரமாகத் தொடர்ந்து விளங்குகிறது என்று தெரிவித்துள்ளார்.
Published on: March 3, 2026 at 7:43 pm
புதுடெல்லி மார்ச் 3 2026; பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் “பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல்” என்ற தலைப்பில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்று உலகம் நம்பகமான மற்றும் நிலைத்த உற்பத்தி கூட்டாளிகளைத் தேடுகிறது என்று குறிப்பிட்டார்.
இந்த திசையில் இந்தியாவுக்கு முக்கிய பங்காளியாக மாறும் வாய்ப்பு உள்ளது என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி, வலுவான பொருளாதாரத்துடன் இந்தியா உலகிற்கு நம்பிக்கையின் ஒளிக்கோபுரமாகத் தொடர்ந்து விளங்குகிறது என்று தெரிவித்துள்ளார். இந்தியா உலகிற்கு நம்பிக்கையின் ஒளிக்கோபுரமாக உருவெடுக்கும்போது, வேகமான பொருளாதார வளர்ச்சி “விக்சித் பாரத்” என்ற கனவினை நனவாக்கும் அடித்தளமாக மாறியுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கட்டிடங்களை அமைக்க, மேலும் உற்பத்தி செய்ய, மேலும் இணைக்க, மேலும் ஏற்றுமதி செய்ய அரசின் நோக்கமும் உறுதியும் தெளிவாக உள்ளது” என்றார்.
மேலும், இந்தியா பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளது, இதனால் நாட்டிற்கு பரந்த வாய்ப்புகளின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்யக்கூடாது என்பது அனைவரின் பொறுப்பு, மேலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலகத் தரத்திற்கு இணையானதாக இருக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க; பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை திருத்திய பஞ்சாப் நேஷனல் வங்கி.. மற்ற வங்கிகளில் ரிட்டன் எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com