Mutual Fund Calculator: கடந்த 5 ஆண்டுகளில் 38.20 சதவீதம் வரை பெஸ்ட் ரிட்டன் கொடுத்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் தெரியுமா?
Mutual Fund Calculator: கடந்த 5 ஆண்டுகளில் 38.20 சதவீதம் வரை பெஸ்ட் ரிட்டன் கொடுத்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் தெரியுமா?
Published on: May 4, 2025 at 12:10 pm
Updated on: May 4, 2025 at 11:15 am
சென்னை, மே 4 2025: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் தற்போது முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. இந்தத் திட்டங்கள் பணவீக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் உள்ளன என பலரும் கூறுவதை பார்க்க முடிகிறது. எனினும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு சான்றளிக்கப்பட்ட வருமான வாய்ப்புகள் எதுவும் இல்லை என்பதையும் முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ளல் வேண்டும்.
இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த மியூச்சுவல் ஃபண்ட் ஒன்று குறித்து பார்க்கலாம். இதன் மூலமாக 15 ஆண்டுகளில் ரூ.1 கோடி வருமானம் திரட்டும் வாய்ப்பும் வருகிறது.
அந்தப் ஃபண்ட் நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் ஆகும். இது கடந்த 10 ஆண்டுகளில் மார்க்கெட்டில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்துள்ளது.
ரூ.1 கோடி திரட்டுவது எப்படி?
இந்தத் திட்டத்தில் கடந்த 10 ஆண்டுகால வருவாய் ரிட்டன் 20.79 சதவீதம் ஆக உள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில் ஃபண்ட் 38.20 சதவீதம் ரிட்டன் வழங்கியுள்ளது. நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் 2010 செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இத்திட்டம் தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்து மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் எஸ்.ஐ.பி முறையில் சேமித்தால் ரூ.16 லட்சத்து 80 ஆயிரம் முதலீடு செய்து இருப்போம். அந்த முதலீடு கிட்டத்தட்ட 14 ஆண்டுகளில் ரூ.1.05 கோடியாக உயர்ந்துள்ளது.
Disclaimer: (மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீட்டுக்கு முன்னர் செபி (இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம்) அங்கீகரித்த முதலீட்டு நிபுணர்களிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது. முதலீட்டாளர்களின் லாப, நஷ்டங்களுக்கு திராவிடன் டைம்ஸ் பொறுப்பேற்காது)
இதையும் படிங்க ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 9.10 சதவீதம் வட்டி: இந்த வங்கிகளை செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com