Mutual Fund SIP Calculator: இன்றைய காலகட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. ரூ.15 ஆயிரம் மாதந்தோறும் எஸ்.ஐ.பி மூலமாக முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்?
Mutual Fund SIP Calculator: இன்றைய காலகட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. ரூ.15 ஆயிரம் மாதந்தோறும் எஸ்.ஐ.பி மூலமாக முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்?
Published on: August 24, 2025 at 2:14 pm
சென்னை, ஆக.24 2025: இன்றைய காலகட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் நன்மதிப்பை பெற்று காணப்படுகின்றன. மேலும், இந்த வகை முதலீடுகள் பணவீக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் வருமான வாய்ப்புகளை தருகின்றன என்பதும் பொருளாதார நிபுணர்களின் கூற்றாக உள்ளது.
எனினும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சான்றளிக்கப்பட்ட வருமான வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதாவது, உறுதியான ரிட்டன் என எதுவும் இல்லை. ஏனெனில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பங்குச் சந்தையை சார்ந்து காணப்படுகின்றன.
12 சதவீத ரிட்டன்
இந்த நிலையில், மாதம் ரூ.15 ஆயிரம் வீதம் எஸ்.ஐ.பி முதலீடு மூலமாக 5 ஆண்டுகள் சேமித்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்று பார்க்கலாம். இந்தக் கணக்கீட்டுக்கு 12 சதவீத ஆண்டு ரிட்டனை எடுத்துக் கொள்வோம்.
ஏனெனில் தற்போது பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் 12 சதவீதத்துக்கும் அதிகமான ரிட்டனை வழங்குகின்றன. இந்த நிலையில், 12 சதவீத ரிட்டன் என்றால் எவ்வளவு பணம் கிடைக்கும் தெரியுமா?
5 ஆயிரம் முதலீடு- எவ்வளவு ரிட்டன்?
அதாவது, 5 ஆண்டுகளில் எஸ்.ஐ.பி மூலமாக மாதம் ரூ.15 ஆயிரம் வீதம் முதலீடு செய்தால் ரூ.9 லட்சம் சேமித்து இருப்போம். 12 சதவீத ரிட்டன் என்றால் ரூ.3,37,295 வட்டி வருவாய் ஆக கிடைக்கும். அந்த வகையில் நமது சேமிப்பு ரூ.12 லட்சத்து 37 ஆயிரத்து 295 ஆக காணப்படும்.
இதுவே 10 ஆண்டுகள் என்றால் ரூ.34 லட்சத்து 85 ஆயிரத்து 086 ரிட்டன் ஆக கிடைக்கும். இதேபோல் ஆண்டு அதிகரிக்க அதிகரிக்க முதலீடும் அதிகரிக்கும். எனினும், இது நாம் முதலீடு செய்துள்ள ஃபண்டின் வளர்ச்சியை பொறுத்து மாறுபடும்.
Disclaimer: (மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீட்டுக்கு முன்னர் செபி (இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம்) அங்கீகரித்த முதலீட்டு நிபுணர்களிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது. முதலீட்டாளர்களின் லாப, நஷ்டங்களுக்கு திராவிடன் டைம்ஸ் பொறுப்பேற்காது)
இதையும் படிங்க : ஹோம் லோன் வட்டியை உயர்த்திய எஸ்.பி.ஐ.. மற்ற வங்கிகளில் எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com