Leela Hotels IPO: லீலா பேலஸ் ஹோட்டல்கள் ஐ.பி.ஓ முதலீடுக்கு இன்று (மே 25 2025) திறக்கப்படுகிறது. இந்த ஐ.பி.ஓ மே 31ஆம் தேதிவரை முதலீடுக்கு திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Leela Hotels IPO: லீலா பேலஸ் ஹோட்டல்கள் ஐ.பி.ஓ முதலீடுக்கு இன்று (மே 25 2025) திறக்கப்படுகிறது. இந்த ஐ.பி.ஓ மே 31ஆம் தேதிவரை முதலீடுக்கு திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: May 26, 2025 at 11:56 am
சென்னை, மே 26 2025: ப்ரூக்ஃபீல்ட் பின்னணி கொண்ட ஸ்க்லாஸ் பெங்களூர் லிமிடெட், “தி லீலா” பேலசஸ், ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் என்ற ஹோட்டல்களை நடத்திவருகிறது. இதன் ஆரம்ப பங்கு விற்பனை 2025 மே 26ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஐ.பி.ஓ மே 28ஆம் தேதி புதன்கிழமை மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிறுவனம் மே 31, 2024 நிலவரப்படி 12 ஹோட்டல்களை கொண்டுள்ளது. மேலும், லீலா அரண்மனைகள், தி லீலா ஹோட்டல்கள் மற்றும் தி லீலா ரிசார்ட்ஸ் ஆகியவை இந்தியாவில் கிட்டத்தட்ட 10 இடங்களில் அமைந்துள்ளன.
லீலா ஹோட்டல் ஐ.பி.ஓ
இந்த நிலையில், புதுடெல்லியை தளமாகக் கொண்ட ஹோட்டல் நிறுவனமான இந்த நிறுவனம், ₹2,500 கோடி மதிப்புள்ள புதிய பங்குகள் வெளியிடுகிறது. இதன் மூலம், கிட்டத்தட்ட ₹3,500 கோடி திரட்ட இலக்கு வைத்துள்ளது. இந்த ஐ.பி.ஓ மே26ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதிவரை மூதலீடுக்கு திறந்திருக்கும்.
இதற்கிடையில், மே 25, 2025 நிலவரப்படி, லீலா ஹோட்டல்ஸ் ஐ.பி.ஓ-வின் கிரே மார்க்கெட் பிரீமியம் (GMP) ஒரு பங்கிற்கு ₹18 ஆக காணப்படுகிறது. அதேநேரம், பொது வெளியீட்டிற்கான அதிகபட்ச விலை வரம்பு ₹435 ஆக உள்ளது. இதனால், ஐ.பி.ஓ ₹453 இல் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது 4.14 சதவீத பிரீமியத்துடன் இருக்கும் என்றும் பங்குச் சந்தை தரவுகள் கூறுகின்றன.
இதையும் படிங்க எஸ்.பி.ஐ அம்ரித் விருஷ்டி வட்டி திருத்தம்; புதிய ரிட்டனை செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com