Fixed Deposit: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ), ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி, ஐ.டி.பி.ஐ (IDBI) வங்கி, ஆக்சிஸ் வங்கி, மகாராஷ்டிரா வங்கி உள்ளிட்ட முன்னணி வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் குறித்து பார்க்கலாம்.
Fixed Deposit: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ), ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி, ஐ.டி.பி.ஐ (IDBI) வங்கி, ஆக்சிஸ் வங்கி, மகாராஷ்டிரா வங்கி உள்ளிட்ட முன்னணி வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் குறித்து பார்க்கலாம்.
Published on: July 2, 2025 at 5:46 pm
சென்னை, ஜூலை 2 2025: இந்திய முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட் உள்ளிட்ட நிரந்தர வட்டி வருவாய் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை பொறுத்தவரை வயது வித்தியாசமின்றி முதலீட்டாளர்கள் முதலீடு செய்கின்றனர்.
எனினும், ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டை பொறுத்த மட்டில் வங்கிகளுக்கு வங்கி மற்றும் காலத்திற்கு ஏற்ப வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகள் வங்கிகளின் வட்டி விகிதத்திலும் பிரதிபலிக்கின்றன.
இதற்கிடையில் சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து 3வது முறையாக ரெப்போ வட்டி விகிதங்களை குறைத்தது. இதைத் தொடர்ந்து, பல்வேறு வங்கிகளின் தங்களின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை திருத்தி அமைத்தன.
இந்த நிலையில் நாட்டின் முன்னணி வங்கிகளின் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.
வங்கி | முதிர்வுக்காலம் (ரூ. 3 கோடிக்கும் குறைவான தொகை) | வட்டி விகிதம் (ஆண்டுக்கு) |
---|---|---|
கனரா வங்கி | 1 வருடம் முதல் 15 மாதங்கள் வரை | 6.5% |
பஞ்சாப் தேசிய வங்கி | 1 வருடம் | 6.4% |
ICICI வங்கி | 1 வருடம் முதல் 15 மாதங்கள் வரை | 6.25% |
மகாராஷ்டிரா வங்கி | 366 நாட்கள் | 6.7% |
யெஸ் வங்கி | 12 மாதங்கள் | 6.75% |
ஆக்ஸிஸ் வங்கி | 1 வருடம் முதல் 1 வருடம் 10 நாட்கள் வரை | 6.25% |
SBI (ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா) | 1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரை | 6.25% |
HDFC வங்கி | 1 வருடம் முதல் 15 மாதங்கள் வரை | 6.25% |
இதையும் படிங்க : 5 ஆண்டுகளில் டபுளிங் பெஸ்ட் ரிட்டன்; இந்த மியூச்சுவல் ஃபண்ட்கள் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com