பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் vs ஹெச்.டி.எஃப்.சி ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்: எதில் பெஸ்ட் ரிட்டன்?

Mutual Funds: மியூச்சுவல் ஃபண்ட் சந்தையில் மிக பிரபலமாக உள்ள பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் திட்டங்களின் முதலீடு, ரிட்டன் குறித்து பார்க்கலாம்.

Published on: June 26, 2025 at 1:08 pm

சென்னை, ஜூன் 25 2025: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை பொறுத்தவரை ஸ்மால், மிட்கேப், லார்ஜ் மற்றும் ஃப்ளெக்ஸி கேப் என பல வடிவங்களை கொண்டுள்ளன. இந்த நிலையில், நாம் தற்போது மார்க்கெட்டில் முன்னணியில் உள்ள பராக் பரிக் ப்ளெக்ஸி கேப் ஃபண்ட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி ப்ளெக்ஸி கேப் ஃபண்ட்கள் குறித்து பார்க்கலாம்.

பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்

இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 3 லட்சத்து 868 கோடி சொத்துக்கள் நிர்வகிக்கப்படுகின்றன. திட்டத்தின் செலவின விகிதம் 1.28 சதவீதம் ஆகும். இத்திட்டம் 2013ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி தொடங்கப்பட்டது.

மேலும், இத்திட்டமானது தொடங்கப்பட்ட நாளில் இருந்து 19.22 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்துள்ளது. திட்டத்தின் 3 ஆண்டு சி.ஏ.ஜி.ஆர் 24.51 சதவீதம் ஆகும். அதேபோல் 5 ஆண்டு மற்றும் 10 ஆண்டு சி.ஏ.ஜி.ஆர் ரிட்டன் முறையை 25.28 சதவீதம் மற்றும் 17.42 சதவீதமாக உள்ளன.

ரூ.1 லட்சம் லம்ப்சம் ரிட்டன்

இத்திட்டத்தில் ரூ.1 லட்சம் லம்ப்சம் முதலீடு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.5 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேநேரம் ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி ரிட்டன் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.34 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்

ஹெச்.டி.எஃப்.சி ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்டின் கீழ் ரூ.75 ஆயிரத்து 784 கோடி சொத்துக்கள் உள்ளன. இத்திட்டத்தின் செலவின விகிதம் 1.39 சதவீதமாக உள்ளது. 1995 ஜனவரி 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டம் தற்போதுவரை 18.90 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்துள்ளது. இத்திட்டத்தின் 3 ஆண்டுகால ரிட்டன் 27.78 சதவீதம் சி.ஏ.ஜி.ஆர் ஆகும். அதேநேரம், 5 மற்றும் 10 ஆண்டுகள் முறையை 28.85 மற்றும் 15.40 சதவீதம் சி.ஏ.ஜி.ஆர் ரிட்டன் வழங்கியுள்ளது.

ரூ.1 லட்சம் லம்ப்சம் முதலீடு

இத்திட்டத்தில் ரூ.1 லட்சம் லம்ப்சம் முதலீடு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.4.19 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேநேரம், ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.3.27 லட்சமாக உயர்ந்துள்ளது. இது 19.07 சதவீதம் சி.ஏ.ஜி.ஆர் ரிட்டன் ஆகும்.

Disclaimer: (மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீட்டுக்கு முன்னர் செபி (இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம்) அங்கீகரித்த முதலீட்டு நிபுணர்களிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது. முதலீட்டாளர்களின் லாப, நஷ்டங்களுக்கு திராவிடன் டைம்ஸ் பொறுப்பேற்காது)

இதையும் படிங்க : ஜெரோதா சில்வர் இடிஎஃப் முதலீடு திட்டம் அறிமுகம்; ரூ.500 முதல் முதலீடு செய்யலாம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com