ரூ.1 லட்சம் முதலீடு, ரூ.2.52 லட்சம் ரிட்டன்.. பெஸ்ட் லம்ப்சம் மியூச்சுவல் ஃபண்ட்!

HDFC Flexi Cap Fund: கடந்த 5 ஆண்டுகளில் இந்த மியூச்சுவல் ஃபண்ட் பெஸ்ட் ரிட்டன் கொடுத்துள்ளது.

Published on: March 6, 2026 at 5:46 pm

சென்னை, மார்ச் 6, 2026: இன்றைய தலைமுறை முதலீட்டாளர்களிடம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மிக பிரபலமாக காணப்படுகின்றன.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் உறுதியான வருமான வாய்ப்புகள் எதுவும் இல்லை என்ற போதிலும் இந்த முதலீடுகள் அதிக வருமான வாய்ப்புகள் பெற காரணமாக இருக்கின்றன.

இதனால் இதில் முதலீடு செய்வது மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகின்றது. இந்த நிலையில் ரூ.1 லட்சம் முதலீட்டை ரூ.2.52 லட்சமாக உயர்த்தும் மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம் குறித்து பார்க்கலாம்.

ஹெச்.டி.எஃப்.சி ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்

ஹெச்.டி.எஃப்.சி ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் நேரடி திட்டத்தில் ரூ.1 லட்சம் லம்ப்சம் முதலீடு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2.52 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தத் திட்டத்தின் சி.ஏ.ஜி.ஆர் வருவாய் லம்ப்சம் முதலீட்டுக்கு கடந்த 5 ஆண்டுகளில் 20.35 சதவீதம் ஆக காணப்படுகின்றது.

ஃபண்ட் பற்றி..

2013-இல் தொடங்கப்பட்ட இந்த ஃப்ளெக்ஸி கேப் திட்டம், தற்போது ₹97,452 கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. மேலும், இந்தப் ஃபண்ட் பெரிய, நடுத்தர, சிறிய மியூச்சுவல் ஃபண்ட் பங்குகளில் முதலீடு செய்யும் திறன் கொண்டது.
இது அதிக இடர் கொண்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீட்டுக்கு முன் ஃபண்ட் தொடர்பான ஆவணங்களை முழுமையாக படிக்கவும்.

இதையும் படிங்க: ஏப்ரலில் போன்பே ஐ.பி.ஓ.. எவ்வளவு நிதி திரட்ட திட்டம்? முழு விவரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com