Indian rupee depreciates: அக்டோபர்-ஜனவரி காலகட்டத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 3.3% சரிந்தது என நாடாளுமன்றத்தில் நிதி இணையமைச்சர் தெரிவித்தார்.
Indian rupee depreciates: அக்டோபர்-ஜனவரி காலகட்டத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 3.3% சரிந்தது என நாடாளுமன்றத்தில் நிதி இணையமைச்சர் தெரிவித்தார்.
Published on: February 11, 2025 at 10:03 pm
அக்டோபர் 2024 முதல் ஜனவரி 2025 வரையிலான காலகட்டத்தில், அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 3.3 சதவீதம் குறைந்துள்ளது என நாடாளுமன்றத்தில் நிதி இணையமைச்சர் தெரிவித்தார்.
எனினும், இந்தச் சரிவு மற்ற ஆசிய நாணயங்களை விட குறைவாக உள்ளது என்றார். அமெரிக்க தேர்தல் முடிவுகளைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், பிற ஆசிய நாணயங்களுடன் சேர்ந்து, அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் குறைந்துள்ளது என்று சவுத்ரி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
தொடர்ந்து, அக்டோபர் 1, 2024 முதல் ஜனவரி 30, 2025 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க டாலர் குறியீடு 7 சதவீதம் உயர்ந்தது மேலும் அனைத்து முக்கிய ஆசிய நாணயங்களும் அமெரிக்க டாலருக்கு எதிராக மதிப்பு குறைந்துள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.
இதையடுத்து, இந்த காலகட்டத்தில் இந்திய ரூபாய் மதிப்பு 3.3 சதவீதம் குறைந்துள்ளது என்றார். மேலும், தென் கொரிய வோன் மற்றும் இந்தோனேசிய ரூபாய் மதிப்பு முறையே 8.1 சதவீதம் மற்றும் 6.9 சதவீதம் குறைந்துள்ளது என்று அவர்ம் கூறினார்.
இதற்கிடையில், ஜூலை மாதம் 2024-25 நிதியாண்டின் பட்ஜெட் உரையில், பயனுள்ள கடன் மேலாண்மை குறித்து மத்திய அரசு ஒரு நடுத்தர கால நிதிக் கொள்கை நிலைப்பாட்டை கோடிட்டுக் காட்டியுள்ளது.
மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு எதிரான கடன் விகிதம் குறைந்து வரும் வகையில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு எதிரான விகிதத்தை பராமரிக்க இது முயல்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க பி.பி.எஃப் திட்டத்தில் இப்படி ஓர் வாய்ப்பா? மாதம் ரூ.1.20 லட்சம் வட்டி இல்லா வருவாய்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com