PPF Calculation: மத்திய அரசின் ஆதரவு பெற்ற பி.பி.எஃப் திட்டத்தில் மாதம் ரூ.3 ஆயிரம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் தெரியுமா? பி.பி.எஃப் திட்டத்தில் தற்போது 7.1 சதவீதம் கூட்டு வட்டி வழங்கப்படுகிறது.
PPF Calculation: மத்திய அரசின் ஆதரவு பெற்ற பி.பி.எஃப் திட்டத்தில் மாதம் ரூ.3 ஆயிரம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் தெரியுமா? பி.பி.எஃப் திட்டத்தில் தற்போது 7.1 சதவீதம் கூட்டு வட்டி வழங்கப்படுகிறது.
Published on: April 17, 2025 at 9:58 am
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது மத்திய அரசால் ஆதரிக்கப்படும் முதலீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டமானது, ஓய்வூதியத்திற்கான சேமிப்பை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும், பி.பி.எஃப் (PPF) பாதுகாப்பு, உத்தரவாதமான வருமானம் மற்றும் வரி சலுகையை வழங்குகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பலரும் இதில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். இந்த நிலையில், பொது வருங்கால வைப்பு நிதியில் மாதந்தோறும் ரூ.3,000 முதல் முதலீடு செய்தால் 18 ஆண்டுகளில் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
வட்டி மற்றும் முதிர்வு காலம்
பிபிஎஃப் திட்டத்தில் தற்போது ஆண்டுக்கு 7.1 சதவீதம் கூட்டு வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் காலம் 15 ஆண்டுகள் ஆகும்.
குறைந்தப்பட்சம் மற்றும் அதிகப்பட்ச முதலீடு
பிபிஎஃப் திட்டத்தில் கணக்கை ரூ.500 செலுத்தி தொடங்கிகொள்ளலாம். இதில் அதிகப்பட்சமாக ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்துக் கொள்ளலாம்.
ரூ.3 ஆயிரம் செலுத்தினால் 18 ஆண்டுகளில் எவ்வளவு ரிட்டன்?
பி.பி.எஃப் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் செலுத்தினால் ஆண்டுக்கு ரூ.36 ஆயிரம் செலுத்தி இருப்பீர்கள். அந்த வகையில், 18 ஆண்டுகளில் செலுத்தப்பட்ட தொகை ரூ.6 லட்சத்து 48 ஆயிரமாக இருக்கும். இந்த காலகட்டங்களில் உங்களுக்கு கிடைக்கும் வட்டி ரூ.6 லட்சத்து 75 ஆயிரத்து 527 ஆக காணப்படும். ஆக, 18 ஆண்டுகால முதிர்வின் போது உங்களுக்கு ரூ.13 லட்சத்து 23 ஆயிரத்து 527 கிடைக்கும்.
இதையும் படிங்க : பஞ்சாப் நேஷனல் வங்கியில் எஃப்.டி வட்டி குறைப்பு; புதிய வீதத்தை செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com