Fixed deposit: தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி (HDFC) பேங்க், ஃபிக்ஸட் டெபாசிட் (FD) வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது. இந்நிலையில், சமீபத்திய ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.
Fixed deposit: தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி (HDFC) பேங்க், ஃபிக்ஸட் டெபாசிட் (FD) வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது. இந்நிலையில், சமீபத்திய ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.
Published on: April 20, 2025 at 11:50 am
சென்னை, ஏப்.19 2025: ஹெச்.டி.எஃப்.சி வங்கி தனது ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை சில குறிப்பிட்ட காலங்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் (bps) வரை குறைத்துள்ளது. இந்தப் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் ரூ.3 கோடிக்கு குறைவான நிலையான வைப்புத் தொகைகளுக்கு பொருந்தும். இந்தப் புதிய ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் இன்று (ஏப்.19 2025) முதல் அமலுக்கு வந்துள்ளன. முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை குறைத்தது. அதன் பின்னர், ஹெச்.டி.எஃப்.சி வங்கி இந்த வட்டி குறைப்பை அமல்படுத்தியுள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்
ஹெச்.டி.எஃப்.சி வங்கி 15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவான நிலையான வைப்புத்தொகை காலங்களுக்கு வட்டி விகிதம் ஐந்து அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, 7.10% இலிருந்து 7.05% ஆக வட்டி குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவான முதிர்ச்சியடையும் நிலையான வைப்புத்தொகைகளுக்கு, வங்கி 20 அடிப்படை புள்ளிகள் அதாவது 7.25% இலிருந்து 7.05% ஆக விகிதத்தைக் குறைத்துள்ளது.
இதையும் படிங்க: கடந்த 5 ஆண்டுகளில் 33% ரிட்டன்.. டாப் 5 வேல்யூ ஃபண்டுகள்!
மேலும், 21 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கு, தற்போதைய விகிதம் இப்போது 6.70% ஆக உள்ளது. இது 7.00% இலிருந்து, பொது குடிமக்களுக்கு 30 அடிப்படை புள்ளிகள் குறைவாக உள்ளது.
தொடர்ந்து, 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகளுக்கும் குறைவான காலங்களுக்கு எஃப்.டி (FD) விகிதம் 10 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, வட்டி விகிதம் 7.00% இலிருந்து 6.90% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இறுதியாக, 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நீண்ட கால FD களுக்கு, விகிதம் இப்போது 6.50% ஆக உள்ளது, இது 7.00% இலிருந்து 50 bps குறைப்பு ஆகும்.
சேமிப்பு வட்டி விகிதம்
இதையும் படிங்க : ஃபிக்ஸட் டெபாசிட் 2025: SBI vs ICICI vs HDFC; எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com