5kg LPG Sales : நாடு முழுக்க பெட்ரோல் மற்றும் எல்.பி.ஜிக்கு தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5kg LPG Sales : நாடு முழுக்க பெட்ரோல் மற்றும் எல்.பி.ஜிக்கு தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Published on: April 8, 2026 at 10:17 am
புதுடெல்லி, ஏப்.8, 2026: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், எல்பிஜி மற்றும் பிஎன்ஜி விநியோகத்தில் பாதிப்பு இல்லை; 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்களின் விற்பனையை இரட்டிப்பாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், எல்பிஜி மற்றும் பிஎன்ஜி விநியோகம் சாதாரணமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற மேற்கு ஆசியா தொடர்பான அமைச்சரவை இடையிலான விளக்கக் கூட்டத்தில், பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூட்டு செயலாளர் சுஜாதா சர்மா இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய அவர், “எந்த எல்பிஜி விநியோக நிலையத்திலும் அசாதாரண சூழல் ஏற்படவில்லை என்றார். மேலும், அனைத்து பெட்ரோல் பங்குகளும் போதுமான அளவு பெட்ரோல், டீசல் கிடைப்பதுடன் இயல்பாக செயல்பட்டு வருகின்றன; எல்பிஜி சிலிண்டர் விநியோகம் சீராக நடைபெற்று வருவதோடு, ஆன்லைன் முன்பதிவுகள் சுமார் 96% ஆக உயர்ந்துள்ளன. வணிக எல்பிஜி ஒதுக்கீடு, நெருக்கடி முன் நிலைகளின் சுமார் 70% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது” என்றார்.
5 கிலோ எல்.பி.ஜி சிலிண்டர்
சிறிய 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்களின் விற்பனையை ஊக்குவிக்க, அவற்றின் விற்பனையை இரட்டிப்பாக்க அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் தினசரி சராசரி விற்பனை சுமார் 77,000 சிலிண்டர்களாக இருந்த நிலையில், தற்போது தினசரி விற்பனை சுமார் 1,00,000 சிலிண்டர்களாக உயர்ந்துள்ளது. மார்ச் 23ஆம் தேதி முதல் சுமார் 7,80,000 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன” எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 1 முதல் 5 ஆண்டு கால எஃப்.டி முதலீடு.. எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com