Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 45 குறைந்து விற்பனையாகிறது.
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 45 குறைந்து விற்பனையாகிறது.

Published on: October 28, 2024 at 9:50 am
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ. 7,360 ஆகவும், பவுன் ரூ. 58,880 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 45 குறைந்து கிராம் ரூ. 7,315 ஆகவும் பவுன் ரூ. 58,520 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,820 ஆகவும் பவுன் ரூ. 62,560ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை கிராம் ரூ.107 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.107,000 ஆகவும் நேற்றைய விலையிலேயே காணப்படுகின்றது.
இதையும் படிங்க கேரள லாட்டரி வின் வின் W-793; ரூ.75 லட்சம் வெல்லப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?

சென்னை, ஜன.13, 2026: சமீபத்தில் வெளியான நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கோரியுள்ளது.
1960களின் மாணவர் புரட்சி மற்றும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 25 காட்சிகள் சென்சார் வாரியத்தால் நீக்கப்பட்ட நிலையில், சில காட்சிகள் கற்பனையாகக் குறிக்கப்பட்டுள்ளன.
முக்கிய எதிர்ப்புகளில், 1965ஆம் ஆண்டின் மொழி சர்ச்சை குறித்த காட்சியை இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாஸ்கர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து பாஸ்கர், “1965இல் காங்கிரஸ் அரசு, தபால் அலுவலக படிவங்கள் அனைத்தும் ஹிந்தியில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என அறிவித்ததே இல்லை. இது எங்கள் கட்சியை அவமதிக்க உருவாக்கப்பட்ட கற்பனை” என அவர் கூறினார்.
மேலும், படத்தில் சிவகார்த்திகேயன் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த காட்சிகள் இந்திரா காந்தியை எதிர்மறையாக காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
“இந்திரா காந்தி பிப்ரவரி 12ஆம் தேதி கோயம்புத்தூருக்கு வரவில்லை. அந்த சந்திப்பு நடந்ததே இல்லை. அந்த நாளில் அவர் கோயம்புத்தூரில் இல்லை” என பாஸ்கர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜயின் ஜனநாயகன் படத்துக்கு என்ன பிரச்னை? உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் மேல்முறையீடு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

மும்பை, ஜன.13, 2026: பிரபல தொழிலதிபர் அனில் அம்பானிக்கு வழங்கப்பட்ட நிவாரண உத்தரவை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் பல வங்கிகள் மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளன. அம்பானிக்கு வழங்கப்பட்ட உத்தரவு, அவருக்கு சில நிதி தொடர்பான சலுகைகளை அளித்திருந்த நிலையில், அதனை எதிர்த்து வங்கிகள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளன.
மும்பை பங்குச் சந்தை, ஐ.டி.பி.ஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஆடிட்டர் பி.டி.ஓ இந்தியா லிமிடெட் எல்.எல்.பி ஆகியவை, தொழிலதிபர் அனில் அம்பானிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என ஒரே நீதிபதி வழங்கிய உத்தரவை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளன.
ஆர்காம் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் அல்லாத இயக்குநராக இருந்த அனில் அம்பானி, மூன்று வங்கிகளுக்கு எதிராக தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்திருந்தார்.
2025 டிசம்பர் 24ஆம் தேதி, நீதிபதி மிலிந்த் ஜாதவ் தலைமையிலான ஒற்றை நீதிபதி அமர்வு, அம்பானியின் வாதத்தை ஏற்று இடைக்கால நிவாரணம் வழங்கியது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) உத்தரவின் கீழ் நடைபெறும் ஃபொரென்சிக் ஆடிட், சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட ஆடிட் தகுதித் தரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டது.
இதனை எதிர்த்து, ஐடிபிஐ வங்கி தற்போது நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்.. பங்குச் சந்தை மூடல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

புதுடெல்லி, ஜன.13, 2026: விக்சித் பாரத் G-RAM-G சட்டத்தின் மூலமாக கிராமப்புற குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 125 நாள் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத்துறை மாநில அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், “விக்சித் பாரத் ஜி ராம் ஜி சட்டத்தின் கீழ், ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும் ஆண்டுதோறும் 125 நாள் கூலி வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதற்கு முன்பு 100 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டன” என்று தெரிவித்துள்ளார்.
இன்று புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “இந்த திட்டம், விதைப்பு மற்றும் அறுவடை உச்சகட்ட காலங்களில் வேளாண் தொழிலாளர்கள் கிடைப்பதை உறுதி செய்ய, மொத்தம் 60 நாள் வேலைஇல்லா காலத்தை வழங்குகிறது” என்றார்.
மேலும், இந்தச் சட்டம் பல்வேறு பொதுப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், நீர்வள பாதுகாப்பு மற்றும் கிராமப்புற அடிக்கட்டு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், திட்டம் முழுமையாக டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்படுவதால், போலியான பயனாளர்களை தடுக்க முடியும் எனவும் அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சோமநாதர் சுயமரியாதை அடையாளம்.. அகமதாபாத்தில் 2036-ல் ஒலிம்பிக்.. அமித் ஷா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

சிட்னி, ஜன.13, 2026: ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலிசா ஹீலி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணிக்காக முக்கிய பங்களிப்பு செய்த ஹீலி, தனது அனுபவம் மற்றும் திறமையால் அணியை பல வெற்றிகளுக்கு வழிநடத்தியவர். உலகக் கோப்பை மற்றும் அஷஸ் தொடர்களில் அவர் ஆஸ்திரேலிய அணிக்காக மறக்க முடியாத ஆட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலிசா ஹீலி, 2026 T20 உலகக் கோப்பைக்கு முன்பாக அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான ஹீலி, மனச்சோர்வு மற்றும் மீண்டும் மீண்டும் ஏற்படும் காயங்கள் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக ஒரு பாட்காஸ்டில் தெரிவித்துள்ளார்.
வரும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு தொடரே, ஆஸ்திரேலிய அணிக்காக அவர் ஆடும் கடைசி தொடர் எனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
T20 போட்டிகளில் அவர் பங்கேற்காமல், ஆஸ்திரேலிய அணிக்கு உலகக் கோப்பைக்கான தயாரிப்பை எளிதாக்குவார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் அணியை வழிநடத்தி, பெர்த் நகரில் நடைபெறும் ஒரே டெஸ்ட் போட்டியில் தனது இறுதி ஆட்டத்தை ஆடவுள்ளார்.
மகளிர் கிரிக்கெட்டின் மிகச் சிறந்த வீராங்கனைகளில் ஒருவரான அலிசா ஹீலி, எட்டு முறை உலகக் கோப்பை வென்ற சாதனையாளர். பல வடிவங்களில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்திய முக்கிய வீராங்கனையாக அவர் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவரிடம் இருந்து வந்த தபால்.. மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய மகளிர் கிரிக்கெட் கேப்டன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

காந்திநகர், ஜன.13, 2026: உள்துறை மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் அமித்ஷா, “அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாகும்” என்று தெரிவித்துள்ளார். காந்திநகர் மாவட்டம் மான்சா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், 267 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார்.
அப்போதுஅமித்ஷா, “2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை அனைத்து துறைகளிலும் உலகின் முன்னணி நாடாக மாற்ற அரசாங்கம் உறுதியாக செயல்படுகிறது” என்றார்.
மேலும், சோமநாத் கோவில் நாட்டின் அடையாளமும் சுயமரியாதையும் எனக் குறிப்பிட்டு, ஆயிரம் ஆண்டுகள் பழமையான அந்த கோவிலின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் சோமநாத் சுயமரியாதை பர்வா ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து அமித்ஷா, “அகமதாபாத் உலகளாவிய விளையாட்டு மையமாக உருவெடுத்து வருகிறது. 2036 ஒலிம்பிக் போட்டிகளை அங்கு நடத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மான்சாவில் புதிதாக கட்டப்பட்ட விளையாட்டு வளாகத்தை உள்ளூர் வீரர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.
மற்றொரு நிகழ்வில், காந்திநகரில் உள்ள குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் BSL-4 பயோகண்டெயின்மென்ட் வசதியைத் தொடங்கி வைத்து உரையாற்றிய அமித்ஷா, “இந்தியாவின் பயோ பொருளாதாரம் 2014இல் 10 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2024 இறுதியில் அது 166 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது” எனக் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொங்கல் தினத்தில் பிரதமர் மோடி அலுவலகம் மாற்றம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com