Nirmala sitaraman: புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை செப்.22ஆம் தேதி முதல் அமலாகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
Nirmala sitaraman: புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை செப்.22ஆம் தேதி முதல் அமலாகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
Published on: September 4, 2025 at 10:57 am
புதுடெல்லி, செப்.4 2025: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் புதன்கிழமை (செப்.3, 2025) அன்று புதுடெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்த்தில், 12 சதவீதம் மற்றும் 28 சதவீத வரி விகிதங்களை நீக்கி, ஜிஎஸ்டி விகிதங்களை பகுத்தறிவுப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி, புதிய வரி விதிப்பு அமைப்பு நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற இரண்டு வரி விதிப்பு முறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது போல், ஆடம்பரப் பொருட்களுக்கு புதிய 40 சதவீத வரியையும் அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி கூட்டம் நிறைவுற்ற பின்னர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்த சீர்திருத்தங்கள் சாமானிய மக்களை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாமானிய மக்களின் அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்களின் மீதான ஒவ்வொரு வரியும் கடுமையான மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது” என்றார்.
மேலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் விகிதங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. உடல் உழைப்பு மிகுந்த தொழில்களுக்கு நல்ல ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாயத் துறை, அத்துடன் சுகாதாரத் துறையும் பயனடையும். பொருளாதாரத்தின் முக்கிய உந்துசக்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க : FD interest rates: எஃப்.டிக்கு பெஸ்ட் ரிட்டன்.. இந்த 6 வங்கிகளை நோட் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com