Fixed Deposit: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 8.40 சதவீதம் வரை வட்டியை வாரி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம். இதில் 5 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டு திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Fixed Deposit: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 8.40 சதவீதம் வரை வட்டியை வாரி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம். இதில் 5 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டு திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Published on: August 17, 2025 at 7:49 pm
சென்னை, ஆக.17 2025: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு என்பது, அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பப்படுகிறது. பொதுவாக, இந்த வகை முதலீட்டில் ரிஸ்க் குறைவு என்பதால் அனைத்து தரப்பு முதலீட்டாளர்களும் இதில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.
இந்த நிலையில், சில வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு (60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறப்பு மூத்தக் குடிமக்கள்) 5 வருட கால ரூ.3 கோடி வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 8.4% வரை வட்டியை தொடர்ந்து வழங்கி வருகின்றன.
மூத்தக் குடிமக்களுக்கு 8 சதவீதத்துக்கு மேல் வட்டி வழங்கும் வங்கிகள்
வ.எண் | ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | வட்டி விகிதம் (%) |
---|---|---|
01 | ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 8.00 |
02 | ஸ்லைஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 8.25 |
03 | சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 8.40 |
இதில், சூரியோதய் சிறு நிதி வங்கி ஐந்து வருட கால நிலையான வைப்புத்தொகைக்கு 8.4% வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஸ்லைஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு ஐந்து வருட கால நிரந்தர வைப்புத்தொகைக்கு 8.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
மற்றொரு சிறு நிதி வங்கியான, ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஐந்து வருட காலத்திற்கு நிலையான வைப்புத்தொகைக்கு 8% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளில் ரூ.5 லட்சம் வரை, இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட காப்பீடு வழங்கப்படுகிறது. ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி எஃப்.டி தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி அலுவலர்களிடம் கேட்டு அறிந்துக்கொள்வது நல்லது.
இதையும் படிங்க : ரூ.10 ஆயிரம் வீதம் எஸ்.ஐ.பி முதலீடு, ரூ.14 லட்சம் ரிட்டன்.. பெஸ்ட் பரஸ்பர நிதி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com