New Tax Bill: புதிய வருமான வரி மசோதாவில் புதிய வரிகள் இருக்க வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் புதிய வருமான வரி மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
New Tax Bill: புதிய வருமான வரி மசோதாவில் புதிய வரிகள் இருக்க வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் புதிய வருமான வரி மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Published on: February 9, 2025 at 10:17 am
Updated on: February 9, 2025 at 1:04 pm
புதிய வருமான வரி மசோதா: 60 ஆண்டுகால பழமையான வருமான வரிச் சட்டத்தை மாற்றும் புதிய வருமான வரி மசோதா, திங்கள்கிழமை (பிப்.10, 2025) மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை தெரிவித்தார்.
இந்த வருமான வரிச் சட்டம் மாநிலங்களவையில், அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமன், “புதிய வருமான வரி திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, வரும் வாரத்தில் மக்களவையில் இது அறிமுகப்படுத்தப்படும். அதன் பிறகு அது ஒரு குழுவிற்கு அனுப்பப்படும்” என்றார்.
நாடாளுமன்றக் குழு அதன் பரிந்துரைகளை வழங்கிய பிறகு, இந்த மசோதா மீண்டும் அமைச்சரவைக்கு அனுப்பப்படும். அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு, அது மீண்டும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும்.
முன்னதாக, ஜூலை 2024 பட்ஜெட்டில், வருமான வரிச் சட்டம், 1961 இன் விரிவான மறுஆய்வை நிதியமைச்சர் முதலில் அறிவித்தார்.
இந்த நிலையில், புதிய வருமான வரி மசோதா ‘அடுத்த வாரம்’ நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், புதிய வருமான வரி மசோதா தெளிவாகவும் நேரடியாகவும் இருக்கும், இதனால் வரி செலுத்துவோர் மற்றும் வரி நிர்வாகம் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
புதிய வருமான வரி மசோதாவில் பின்வரும் அம்சங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : ரூ.12 லட்சம் வரை வரி விலக்கு.. புதிய வரி விதிப்பு அறிமுகம்.. நிர்மலா சீதாராமன் அதிரடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com