Mutual Fund Schemes | செயல்திறனின் அடிப்படையில், சிறப்பாக செயல்பட்ட குழந்தைகள் கல்வி தொடர்பான 3 மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
டாடா யங் சிட்டிசன்ஸ் ஃபண்டு
இது நீண்ட கால வளர்ச்சியில் கவனம் செலுத்தும் திறந்தநிலை நிதியாகும். தங்கள் குழந்தையின் உயர்கல்வியில் முதலீடு செய்யத் தொடங்க விரும்பும் பெற்றோருக்கு இது ஏற்றது.
இந்தத் திட்டம் குறைந்தப்பட்சம் 5 ஆண்டு லாக்இன்-ஐ கொண்டது. மேலும், இந்தத் திட்டமானது கடந்த மூன்று ஆண்டுகளில் 16.60% மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 21.54% என்ற கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை கொண்டுள்ளது.
எஸ்பிஐ மேக்னம் சில்ட்ரன்ஸ் பெனிஃபிட் ஃபண்டு
நீண்ட கால மூலதன மதிப்பீட்டில் கவனம் செலுத்தும் மியூச்சுவல் ஃபண்டு திட்டமாகும். இந்த திட்டம் பெரும்பாலும் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான செக்யூரிட்டிகளில் முதலீடு செய்வதால் அதிக ரிஸ்க் பட்டியலில் வருகிறது. மூன்று மற்றும் ஐந்தாண்டு CAGR முறையே 27.27% மற்றும் 45.79% வருவாயை கொண்டுள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ ப்ருடென்ஷியல் சைல்டு கேர் ஃபண்டு
இந்தத் திட்டம் குறிப்பாக இளம் பெற்றோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று மற்றும் ஐந்தாண்டு CAGR புள்ளிவிவரங்கள் முறையே 19.80% மற்றும் 19.96% ஆக உள்ளது.
(Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். திட்டத்தின் கடந்தகால வருவாய் எதிர்கால லாபத்துக்கு எவ்விதத்திலும் உத்ரவாதம் அளிக்காது. திராவிடன் டைம்ஸ் குறிப்பிட்ட எந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தையும் விளம்பரப்படுத்தவில்லை. இதில், முதலீடு செய்வது முதலீட்டாளரின் தனிப்பட்ட விருப்பு, பொறுப்பை சார்ந்தது.)
இதையும் படிங்க
Top 5 ELSS mutual Funds: கடந்த 10 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்கள் குறித்து பார்க்கலாம்….
எஸ்.ஐ.பி (SIP)-களில் மாதத்திற்கு ரூ. 7,000 முதலீட்டில் நீண்ட காலத்தில் பணத்தை பெருமளவில் பெருக்க முடியும்….
மாதந்தோறும் ரூபாய் 2000 வீதம் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி. திட்டத்தில் முதலீடு செய்து கோடிகளை குறைப்பது எப்படி?…
Mutual Fund | கடந்த ஓராண்டில் 35 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இங்கு உள்ளன….
Mutual Fund | மூன்று ஆண்டுகளில் 20 சதவீதம் வரை ரிட்டன் வழங்கும் மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம்….
Mutual Fund | கடந்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்த மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்