Special FD Schemes: ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் அனைத்து தரப்பு முதலீட்டாளர்களாலும் விரும்பப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் உறுதியான வருமான வாய்ப்பை வழங்குகின்றன.
Special FD Schemes: ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் அனைத்து தரப்பு முதலீட்டாளர்களாலும் விரும்பப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் உறுதியான வருமான வாய்ப்பை வழங்குகின்றன.
Published on: March 5, 2025 at 4:59 pm
இன்றைய காலகட்டத்தில் பிக்சட் டெபாசிட் முதலீடுகள் பல்வேறு தரப்பினராலும் விரும்பப்படுகின்றன. வங்கிகளைப் பொறுத்தமட்டில் பிக்சட் டெபாசிட் திட்டங்களை சிறப்பு வட்டி விகிதத்துடனும் வழங்குகின்றன. எனினும் இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும். இதுபோன்ற பிக்சட் டெபாசிட் களை வங்கிகள் தொடர்ந்து வழங்கி வந்தாலும் தற்போதைய சில பிக்சட் டெபாசிட் திட்டங்கள் குறித்து நாம் பார்க்கலாம். இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் 8.05 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகின்றன. அந்த வகையில் நாம் தற்போது ஐந்து சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
இதில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அம்ரித் விருஷ்டி மற்றும் அம்ரித் கலாஸ் உள்ளிட்ட திட்டங்களையும் இந்தியன் வங்கி இந்த் சுப்ரீம் 300 மற்றும் இந்தச் சூப்பர் 400 நாட்கள் கொண்ட சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தையும் ஐ.டி.பி.ஐ வங்கி உத்சவ் என்ற சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த பிக்சட் டெபாசிட் திட்டங்கள் 2025 மார்ச் 31ஆம் தேதியோடு நிறைவு பெறுகின்றன.
இந்த நிலையில், எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி மற்றும் அம்ரித் கலாஸ் ஆகிய சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் 2025 மார்ச் மாதம் 31ஆம் தேதியோடு நிறைவு பெறுகின்றன. இதில், அம்ரித் விருஷ்டி திட்டம் 444 நாட்களைக் கொண்டது ஆகும். இந்தத் திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 7.25% வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. எஸ்பிஐ அம்ரித் கலாஸ் திட்டத்தை பொருத்தமட்டில் 400 நாட்கள் கால அளவு கொண்டது ஆகும். இதில் மூத்த குடிமக்களுக்கு 7.60 சதவீத வட்டியும் பொது குடிமக்களுக்கு 7 .10 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க கடன் வட்டி விகிதம் 0.25 அடிப்படை புள்ளிகள் குறைப்பு: பஞ்சாப் நேஷனல் வங்கி அதிரடி!
ஐ.டி.பி.ஐ வங்கி உத்தவ்
ஐ.டி.பி.ஐ வங்கி உத்சவ் பிக்சட் டெபாசிட் திட்டத்தை பொருத்தமட்டில், திட்டத்தின் முதிர்ச்சியை பொறுத்து வட்டி வழங்கப்படுகிறது. இந்தியன் வங்கியின் 300 நாட்கள் சிறப்பு பிக்சட் டெபாசிட் மற்றும் 400 நாட்கள் சிறப்பு பிக்சர் டெபாசிட்டுக்கு சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 8.05% வட்டி விகிதம் பிக்சட் டெபாசிட்டுக்கு வழங்கப்படுகிறது.
பேங்க் ஆப் பரோடா
இதேபோல் பேங்க் ஆப் பரோடா 333 நாட்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 7.15 சதவீத வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 7.65 சதவீத வட்டியும் வழங்குகிறது. தொடர்ந்து 399 நாட்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 7.25% வட்டி பொதுக்குடி மக்களுக்கும் 7.75% வட்டி மூத்த குடிமக்களுக்கும் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க :போஸ்ட் ஆபீஸ் ppf ஸ்கீம்.. மாதம் ரூபாய் 2,000 முதலீடு.. எவ்வளவு ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com