₹.6, 500 கோடி திரட்டிய பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ்: இரட்டிப்பாகுமா முதலீட்டாளர்கள் பணம்?

பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் முதல் பங்கு வெளீயீடு (IPO) மூலமாக ரூ.6,500 கோடி திரட்டியுள்ளது.

Published on: September 13, 2024 at 9:40 pm

Bajaj Housing Finance IPO | பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் ஐ.பி.ஓ ஒதுக்கீடு செப்டம்பர் 12 ஆம் தேதி இறுதி செய்யப்பட்டது. இது, செப்டம்பர் 16 ஆம் தேதி என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ.,யில் பட்டியல் நடைபெறும்.
இதற்கிடையில், சில முதலீட்டாளர்கள் தங்களுக்கு ஐ.பி.ஓ இன்னமும் ஒதுக்கப்படவில்லை எனக் கூறுகின்றனர். அப்படி பங்குகள் ஒதுக்கப்படாவிட்டால் அவர்களுக்கு பணம் இன்று முதல் திரும்ப அளிக்கப்படும்.

இதற்கிடையில், நிறுவனத்தின் பங்குகள் சாம்பல் சந்தையில் 105% க்கும் அதிகமான பிரீமியத்தைப் பெற்றன என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் GMP பட்டியலிடப்பட்ட நாளில் முதலீட்டாளரின் பணத்தை இரட்டிப்பாக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது.

முன்னதாக, செப்டம்பர் 09 அன்று முதலீட்டாளர்களுக்கு திறக்கப்பட்ட ஐபிஓ செப்டம்பர் 11 முதல் ஏலம் எடுப்பது நிறுத்தப்பட்டது. இதன்மூலம், நிறுவனம் புதிய பங்குகள் மற்றும் விற்பனைக்கான சலுகையின் மூலம் 6,560 கோடி ரூபாய் திரட்டியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ரூ.10,000 SIP முதலீடு, ₹.8.51 லட்சமாக உயர்வு: இந்த மியூச்சுவல் ஃபண்டு தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com