Nifty IT Falls 23% in 2026: டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் டெக் வீழ்ச்சி கண்டுள்ளன என்றும் 2026-இல் நிப்டி ஐடி குறியீடு 23% சரிவை கண்டுள்ளன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Nifty IT Falls 23% in 2026: டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் டெக் வீழ்ச்சி கண்டுள்ளன என்றும் 2026-இல் நிப்டி ஐடி குறியீடு 23% சரிவை கண்டுள்ளன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Published on: March 16, 2026 at 1:15 pm
மும்பை, மார்ச் 16, 2026: நடப்பாண்டு, தொடக்கம் முதலே, செயற்கை நுண்ணநிவு எனப்படும் ஏ.ஐ, தகவல் தொழில்நுட்ப வேலைகளை பாதிக்கும் என்ற அச்சத்தால் டெக் பங்குகள் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளன.
டெக் பங்குகளை வாங்கும் நேரமா?
இந்நிலையில், பல ப்ரோக்கரேஜ் நிறுவனங்கள் முன்னணி லார்ஜ்-கேப் டெக் பங்குகளுக்கு ‘வாங்கும்’ பரிந்துரை வழங்கியுள்ளன. ஆனால் சில கவலைக்கிடமான பகுதிகள் இன்னும் உள்ளன. இந்நிலையில், கோடக் நியோ நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப ஆய்வாளர் சுமித் போகர்னா கூறுகையில், “மதிப்பீடுகள் தற்போது மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளன. இதுவரை வந்துள்ள எதிர்மறை செய்திகள் அனைத்தும் விலைகளில் பிரதிபலித்துவிட்டன. புதியதாக ஏதேனும் வந்தால் அது வேறு விஷயம். உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது” என்றார்.
மேலும் அவர், “அனைத்தும் அல்ல, ஆனால் பெரும்பாலான லார்ஜ்-கேப் ஐடி நிறுவனங்கள் தங்களின் 10 ஆண்டு மல்டிபிள் அளவுக்கு கீழே விற்பனையாகின்றன. நீண்டகால பார்வையில் இவற்றைப் பார்க்கலாம். இன்போசிஸ் தற்போதைய நிலைகளில் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது.
அடுத்து டி.சி.எஸ்-ஐ கவனிக்கலாம், அது மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. மதிப்பீடுகள் கவர்ச்சிகரமாக உள்ளன. டெக் மகிந்திரா நன்றாகத் தெரிகிறது. விப்ப்ரோ குறித்து நாங்கள் நீண்டகாலமாக எதிர்மறையாகவே இருந்தோம், ஏனெனில் அது ஒப்பீட்டளவில் குறைவாக செயல்பட்டுள்ளது” என்றார்.
23 சதவீத சரிவு
இதற்கிடையில், டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் டெக் வீழ்ச்சி கண்டுள்ளன என்றும் 2026-இல் நிப்டி ஐடி குறியீடு 23% சரிவை கண்டுள்ளன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மியூச்சுவல் ஃபண்ட் ‘இன்ட்ரா டே’ வணிகம்.. செபி சுற்றறிக்கை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com