Fixed Deposit | இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நிதிக் கொள்கைக் குழு, தொடர்ந்து பத்தாவது முறையாக பெஞ்ச்மார்க் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாக வைத்துள்ளது. இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கி டிசம்பர் கூட்டத்தில் வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது கடன் மற்றும் வைப்பு விகிதங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
இந்த நிலையில், ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு ஹெச்டிஎஃப்சி வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கோடக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நாட்டின் முன்னணி வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை பார்க்கலாம்.
வங்கி
பொது வட்டி விகிதம் (% )
மூத்தக் குடிமக்கள் வட்டி விகிதம்(% )
ஆக்ஸிஸ் வங்கி
7.10
7.60
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
7.00
7.50
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
7 .00
7.50
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
6.75
7.25
பேங்க் ஆஃப் பரோடா
6.5
7.15
கோடக் மகிந்திரா வங்கி
7.00
7.60
வங்கிகளின் 3 ஆண்டு எஃப்.டி வட்டி விகிதம்
ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் மூன்று ஆண்டு நிலையான வைப்பு வட்டி விகிதம் பொது குடிமக்களுக்கு 6.75 சதவீதமாகவும் மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவீதமாகவும் உள்ளது. இந்த வட்டி விகிதங்கள் ஜூன் 15 முதல் அமலுக்கு வந்துள்ளன. பாங்க் ஆஃப் பரோடா பொதுக் குடிமக்களுக்கு 6.5 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.15 சதவீதமும் வழங்குகிறது. சமீபத்திய விகிதங்கள் அக்டோபர் 3 முதல் அமலுக்கு வந்தன.
கோடக் மஹிந்திரா வங்கி பொது குடிமக்களுக்கு 7 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.6 சதவீதமும் வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஜூன் 14ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. ஹெச்டிஎஃப்சி வங்கி, ஜூலை 24 முதல், பொதுக் குடிமக்களுக்கு 7 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதமும் வழங்குகிறது. அதே வட்டி விகிதங்களை ஐசிஐசிஐ வங்கி வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.
SBI Patron interest rates: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ மூத்தக் குடிமக்களுக்கு சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை வழங்கிவருகிறது….
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.