Fixed Deposit | எஃப்.டி. வட்டி விகிதங்கள் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடுகின்றன. அந்த வகையில், மூத்த குடிமக்களுக்கு அதிக எஃப்.டி. வட்டி விகிதங்களை வழங்கும் 10 ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளை இப்போது பார்க்கலாம்.
சீனியர் சிட்டிசன் எஃப்.டி. வட்டி விகிதங்கள்
பாதுகாப்பான முதலீட்டை தேடுபவர்களுக்கு எஃப்.டி. ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. எஃப்.டி.கள் முதிர்ச்சியின் போது உத்தரவாதமான நிலையான வருவாயை வழங்குகின்றன. அவை நம்பகமான மற்றும் ஆபத்துகுறைவான ஒன்றாக உள்ளது. மூத்த குடிமக்கள் பெரும்பாலும் எஃப்.டி. திட்டங்களில் அதிக வட்டி விகிதங்களைப் பெறுகின்றனர்.
மூத்த குடிமக்களுக்கு சிறந்த எஃப்.டி. திட்டங்களை வழங்கும் 10 ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
நார்த் ஈஸ்ட் ஸ்மால் பைனான்ஸ் வங்கி
வங்கியானது 1111-நாட்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்களில் வருடத்திற்கு 9% வட்டி வழங்குகிறது.
மூத்த குடிமக்களுக்கு 9.5% வட்டி வழங்குகிறது.
1 ஆண்டு எஃப்.டி. க்கு 7%, 3 ஆண்டு எஃப்.டி. க்கு 9% மற்றும் 5 ஆண்டு திட்டங்களுக்கு 6.25% வட்டி வழங்குகிறது.
மூத்த குடிமக்கள் கூடுதல் 0.5% வட்டி பெறுகிறார்கள். 1 வருடத்திற்கு 7.5%, 3 ஆண்டுகளுக்கு 9.5% மற்றும் 5 ஆண்டுகளுக்கு 6.75% வட்டி விகிதங்களைப் பெறுகிறார்கள்.
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
- 1001 நாட்களில் முதிர்ச்சியடையும் திட்டத்திற்கு வங்கி 9% எஃப்.டி. விகிதத்தை வழங்குகிறது.
- மூத்த குடிமக்களுக்கு 9.5% வட்டி வழங்குகிறது.
- வழக்கமான வாடிக்கையாளர்கள் 1 ஆண்டு எஃப்.டி-க்கு 7.85%, 3 ஆண்டு எஃப்.டி-க்கு 8.15% மற்றும் 5 ஆண்டு எஃப்.டி-க்கு 8.15% என்ற வட்டி பெறுகிறார்கள்.
- மூத்த குடிமக்கள் 1 வருடத்திற்கு 8.35%, 3 ஆண்டுகளுக்கு 8.65% மற்றும் 5 ஆண்டுகளுக்கு 8.65% என கூடுதல் 0.5% வட்டியைப் பெறுகிறார்கள்.
சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
- 2 ஆண்டுகள் 2 நாட்கள் காலவரையறை கொண்ட எஃப்.டி-யில் பொது வாடிக்கையாளர்களுக்கு 8.6% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 9.1% வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது.
- சாதாரண வாடிக்கையாளர்களுக்கு, 1 ஆண்டு எஃப்.டி-க்கு 8.05%, 3 ஆண்டு எஃப்.டி-க்கு 8.6% மற்றும் 5 ஆண்டு எஃப்.டி-க்கு 8.25%. மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.5% வட்டி வழங்கப்படுகிறது.
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
- 2 முதல் 3 வருட காலத்தில் முதிர்ச்சியடையும் எஃப்.டி. திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 8.5% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 9.1% வருடாந்திர எஃப்.டி. வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது.
- 1 வருட எஃப்.டி-யின் விகிதம் 8%, 3 வருட எஃப்.டி- 8.5% மற்றும் 5 வருட எஃப்.டி- 7.75% வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.60% வட்டி வழங்கப்படுகிறது.
ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
- ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுதோறும் 8.3% எஃப்.டி. விகிதங்களையும், மூத்த குடிமக்களுக்கு 18-24 மாத கால அவகாசம் கொண்டஎஃப்.டி.களுக்கு 8.8% வட்டியையும் வழங்குகிறது.
- 1 வருட எஃப்.டி.-க்கு 6%, 3 வருட எஃப்.டி.-க்கு 7.5% மற்றும் 5 வருட எஃப்.டி.க்கு 6.5% வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது.
- மூத்த குடிமக்களுக்கு கூடுதல் 0.50% வட்டியுடன், 1 வருடத்திற்கு 6.5%, 3 ஆண்டுகளுக்கு 8% மற்றும் 5 ஆண்டுகளுக்கு 7% வட்டி வழங்கப்படுகிறது.
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
- 1 வருடம் முதல் 3 ஆண்டுகள் வரையிலான காலத்தில் முதிர்ச்சியடையும் பொது வாடிக்கையாளர்களுக்கு 8.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.75% எஃப்.டி. வீதத்தை வங்கி வழங்குகிறது.
- 1 வருட எஃப்.டி.-க்கு 8.25%, 3 வருட எஃப்.டி.-க்கு 8.25% மற்றும் 5 வருட எஃப்.டி.-க்கு 8.20% விகிதங்கள் வழங்கப்படுகிறது.
- மூத்த குடிமக்களுக்கு வங்கி கூடுதல் 0.50% வழங்குகிறது.
ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
- வங்கியானது 444 நாட்களில் முதிர்ச்சியடையும் எஃப்.டி திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.75% என்ற வட்டி வழங்குகிறது.
- 1 ஆண்டு எஃப்.டி-க்கு 8.10% வட்டி, 3 ஆண்டு எஃப்.டி-க்கு 8% வட்டிமற்றும் 5 ஆண்டு எஃப்.டி-க்கு 7.25% வட்டி வழங்கப்படுகிறது.
- மூத்த குடிமக்களுக்கு வங்கி கூடுதலாக 0.50% வட்டி வழங்குகிறது.
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
- 1 வருட எஃப்.டி-க்கு பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 8.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.75% எஃப்.டிவீதத்தை வழங்குகிறது.
- 1 ஆண்டு எஃப்.டி-க்கு 8.25% வட்டி, 3 வருட எஃப்.டி-க்கு 7.20% வட்டி மற்றும் 5 வருட எஃப்.டி-க்கு 7.20% என்ற வட்டி வழங்குகிறது.
- மூத்த குடிமக்களுக்கு வங்கி கூடுதலாக 0.50% வட்டி வழங்குகிறது. அதன்படி, 1 வருடத்திற்கு 8.75%, 3 ஆண்டுகளுக்கு 7.70% மற்றும் 5 ஆண்டுகளுக்கு 7.70% வட்டி வழங்குகிறது.
எஸ்.பி.எம். வங்கி
- 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் மற்றும் 3 நாட்கள் வரையிலான காலவரையறையில் முதிர்ச்சியடையும் எஃப்.டி-யில் பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுதோறும் 8.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.75% எஃப்.டி. வட்டி வீதத்தை வங்கி வழங்குகிறது.
- 1 வருட எஃப்.டி-க்கு 7.05%, 3 வருட எஃப்.டி-க்கு 7.30% மற்றும் 5 வருட எஃப்.டி-க்கு 7.75% வட்டி வழங்குகிறது.
- மூத்த குடிமக்களுக்கு வங்கி கூடுதலாக 0.50% வட்டி வழங்குகிறது. அந்தவகையில், அவர்களுக்கு 1 வருடத்திற்கு 7.55%, 3 ஆண்டுகளுக்கு 7.80% மற்றும் 5 ஆண்டுகளுக்கு 8.25% வட்டி விகிதங்களை வழங்குகிறது.
ஈ.எஸ்.ஏ.எஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
- 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான காலப்பகுதியில் முதிர்ச்சியடையும் எஃப்.டி.யில் பொது வாடிக்கையாளர்களுக்கு 8.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.75% எஃப்.டி வீதத்தை வங்கி வழங்குகிறது.
- 1 வருட எஃப்.டி-க்கு 6%, 3 வருட எஃப்.டி-க்கு 6.75% மற்றும் 5 வருட எஃப்.டி-க்கு 6.25% வட்டி வழங்கப்படுகிறது.
- மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.50% வட்டி வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 8.75% வட்டி; சீனியர் சிட்டிசன்கள் நோட் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்