புதுடெல்லி, ஆக.26 2025: அடுத்த 40-50 ஆண்டுகள் பாரதிய ஜனதா ஆட்சிதான் என்பது உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எப்படி தெரியும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
பீகாரில் ராகுல் காந்தி பரப்புரை
பீகார் மாநிலம் மதுபானி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பாக பேசிய அவர், “அமித் ஷாவின் பேச்சை பாருங்கள்.
அடுத்து 40-50 ஆண்டுகள் வரை பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் எனக் கூறுகிறார். இது அவருக்கு எப்படி தெரியும்? இதற்கும் வாக்கு திருட்டுக்கும் தொடர்பு உள்ளது. அமித் ஷாவின் கூற்று உங்களுக்கு வித்தியாசமாக இல்லையா? அது இயல்புக்கு மாறாக உள்ளது” என்றார்.
மேலும், “அடுத்த 40-50 ஆண்டுகள் வரை பா.ஜ.க ஆட்சிதான் என அவரால் எப்படி கூற முடியும்?” என்றும் ராகுல் காந்தி கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து, “நான் பொய் கூறவில்லை; வாக்கு திருட்டுக்கு பின்னால் உள்ள உண்மை என்ன? அது மக்களுக்கு தெரிய வேண்டும்” என்றார்.
பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் பாரதிய ஜனதா மீது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அந்தக் குற்றச்சாட்டில், பாரதிய ஜனதா வாக்கு திருட்டில் ஈடுபடுகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : பிரமாண பத்திரம் or மன்னிப்பு.. ராகுல் காந்திக்கு சிக்கலான ‘வாக்கு திருட்டு’!
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (செப்டம்பர் 1, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஆகஸ்ட் 31, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
Rahul Dravid: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகியுள்ளார். இதற்கு பின்னணியில் சஞ்சு சாம்சன் இருக்கிறாரா?…
Putin to visit India: ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அரசு முறை பயணமாக வரும் டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார். இந்த தகவலை கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது….
HDFC mutual funds: கடந்த 3 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த டாப் ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். இதில் ஒரு ஸ்கீம் கடந்த…
TTV Dinakaran: ”சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தோடு மழலைக் குழந்தைகளின் எதிர்காலத்தோடும் விளையாடும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.” என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கடும்…