காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

Published on: December 14, 2024 at 12:11 pm

Updated on: December 14, 2024 at 5:05 pm

EVKS Elangovan Passes away | காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

13 நவம்பர் 2024 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று(டிசம்பர் 14) உயிரிழந்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினராக பொறுப்பு வகித்த தனது மகன் திருமகனின் மறைவைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் அந்த தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் இதுவரை இரு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் வெற்றி பெற்றுள்ளார். மேலும், 2000- 2002-ஆம் ஆண்டு வரையிலும், பின்னர் 2014 – 2016-ஆம் ஆண்டு வரையிலும் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க தங்கம் விலை அதிரடி சரிவு ; வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. மனசாட்சி இருந்தால்.. அன்புமணி காட்டம்! Anbumani Ramadoss

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. மனசாட்சி இருந்தால்.. அன்புமணி காட்டம்!

மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம்.. மராட்டியத்தில் மின் கட்டணம் குறைப்பு.. தமிழ்நாட்டில் அதிகரிப்பு ஏன்? அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss

மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம்.. மராட்டியத்தில் மின் கட்டணம் குறைப்பு.. தமிழ்நாட்டில் அதிகரிப்பு ஏன்? அன்புமணி ராமதாஸ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com