திராவிட மாடல் அரசின் தூக்கமும், துரோகமும் எப்போது களையும்? அன்புமணி ராமதாஸ் கேள்வி

“இரண்டாவது முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த களமிறங்கிய கர்நாடகம்: திராவிட மாடல் அரசின் தூக்கமும், துரோகமும் எப்போது களையும்?” என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: September 9, 2025 at 5:25 pm

சென்னை, செப்.9, 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் இரண்டாவது முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வரும் 22-ஆம் தேதி முதல் மேற்கொள்ளவிருக்கும் அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், அதற்கான பயிற்சிகளை நேற்று முதல் தொடங்கியிருக்கிறது.

கர்நாடக மக்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்பதற்காக அம்மாநில அரசு காட்டும் அக்கறையும், தீவிரமும் பாராட்டத்தக்கவை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “கர்நாடகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டில் முதல் முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின் பத்தாண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அண்மைக்கால தரவுகளைத் திரட்டும் நோக்குடன் இரண்டாவது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வரும் 22-ஆம் தேதி முதல் கர்நாடக அரசு மேற்கொள்ளவுள்ளது. 7 கோடி மக்கள் தொகை கொண்ட கர்நாடகத்தில் மொத்தம் 15 நாள்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படவுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, “ஆனால், இங்கு தமிழ்நாட்டில்….?

பெரியாரின் பேரன் என்று கூறிக் கொள்பவர்களின் ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், அதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று கூறியே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இல்லாத அதிகாரத்தைக் கூட போராடிப் பெற்று செயல்படுத்த வேண்டியது தான் மக்கள் நல அரசின் கடமை. ஆனால், திமுக அரசு இருக்கும் அதிகாரத்தைக் கூட பயன்படுத்த மறுக்கிறது. இதற்குக் காரணம்… தமிழகத்தில் யாருக்கும் சமூகநீதி கிடைத்துவிடக் கூடாது என்ற தீய எண்ணம் தான்.

கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்காக தனியாகவே ஒரு கணக்கெடுப்பை 63 நாள்களில் அம்மாநில அரசு நடத்தி முடித்துள்ளது. இவ்வளவையும் சுட்டிக்காட்டியும் கூட, மு.க.ஸ்டாலின் அரசு அசைந்து கொடுக்கவில்லை. தமிழ்நாட்டில் திமுக அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாததை விட பெரிய கொடுமை என்னவென்றால், சமூகநீதியில் அக்கறை இருப்பதைப் போல நடிப்பது தான்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் கடந்த 37 ஆண்டுகளில் 3 முறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் வாய்ப்பு கிடைந்தது. முதல் இரு வாய்ப்புகளும் பயன்படுத்தப்பட்டிருந்தால் சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றிருக்கும். ஆனால், மூன்று வாய்ப்புகளையும் சிதைத்து சமூகநீதியை குழிதோண்டி புதைத்தது திமுக அரசு தான். அத்தகைய சமூகநீதி பாவங்களை செய்த திமுக, இனியாவது சமூகநீதி துரோகத்தையும், தூக்கத்தையும் களைந்து விட்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : மல்லை சத்யா நிரந்தர நீக்கம்.. வைகோ பரபரப்பு அறிக்கை.. முழு விவரம்!

பா.ஜ.க எம்.பி சுரேஷ் கோபிக்கு சிக்கல்.. செக் வைத்த இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி! Election Plea Against Suresh Gopi

பா.ஜ.க எம்.பி சுரேஷ் கோபிக்கு சிக்கல்.. செக் வைத்த இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி!

Election Plea Against Suresh Gopi: கேரள உயர்நீதிமன்றம் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் மனுவை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இது…

மனைவியின் பெற்றோர் சொத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. ஆந்திர உயர் நீதிமன்றம்! Andhra Pradesh High Court

மனைவியின் பெற்றோர் சொத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. ஆந்திர உயர் நீதிமன்றம்!

Andhra Pradesh High Court: இந்துக் வாரிசுரிமைச் சட்டத்தின்படி, மனைவி குழந்தையில்லாமல் இறந்திருந்தாலும், கணவருக்கு அவளது பெற்றோரின் சொத்தில் உரிமை இல்லை என்று ஆந்திரா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது….

இன்ட்ரா டே- வர்த்தகத்தில் போக்கு காட்டிய சந்தை.. நீண்ட கால முதலீட்டாளர்கள் விற்கலாமா? Share Market Today

இன்ட்ரா டே- வர்த்தகத்தில் போக்கு காட்டிய சந்தை.. நீண்ட கால முதலீட்டாளர்கள் விற்கலாமா?

Share Market Today: இன்றைய பங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 73,134.69 புள்ளிகளில் முடிந்தது; இது, 1,187 புள்ளிகள் உயர்வு ஆகும்….

கேரள லாட்டரி குலுக்கல்.. ரூ.1 கோடியை வெல்லும் அதிர்ஷ்டசாலி யார்? Kerala Lottery Result Today

கேரள லாட்டரி குலுக்கல்.. ரூ.1 கோடியை வெல்லும் அதிர்ஷ்டசாலி யார்?

Kerala Lottery Result Today : கேரள லாட்டரி தனலட்சுமி டி.எல்-46 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின….

தோனி ஊரில் ஹாக்கி போட்டிகள்.. களை கட்டும் சப் ஜூனியர் மகளிர் தேசிய சாம்பியன்ஷிப்! Hockey India Sub Junior Women’s Championship 2026

தோனி ஊரில் ஹாக்கி போட்டிகள்.. களை கட்டும் சப் ஜூனியர் மகளிர் தேசிய

Hockey India Sub Junior Women’s Championship 2026: 16வது ஹாக்கி இந்தியா சப் ஜூனியர் மகளிர் தேசிய சாம்பியன்ஷிப் – 2026 இன்று தொடங்குகின்றன….

மக்கள் தொகை கணக்கெடுப்பு.. வீட்டில் இருந்தபடியே பதிவு செய்யலாம்! Census 2027

மக்கள் தொகை கணக்கெடுப்பு.. வீட்டில் இருந்தபடியே பதிவு செய்யலாம்!

Census 2027: உலகின் மிகப்பெரியதும், முதல் முறையாக முழுமையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027 இன்று தொடங்கியுள்ளது. இது, மக்கள்…

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com