How to make potato paneer chilli | குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சுவையான பொட்டேட்டோ பன்னீர் சில்லி எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?
How to make potato paneer chilli | குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சுவையான பொட்டேட்டோ பன்னீர் சில்லி எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?
Published on: November 9, 2024 at 9:28 am
How to make potato paneer chilli | சுவையான பொட்டேட்டோ பன்னீர் சில்லி வெங்கடேஷ் பட் ஸ்டைலில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
பன்னீர் – 100 கிராம்
உருளைக்கிழங்கு -4
கான்பிளார் -5 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொடை மிளகாய் -1
பெரிய வெங்காயம்-1
பூண்டு -1 டேபிள் ஸ்பூன் ( பொடியாக நறுக்கியது)
மிளகாய் – 1 டேபிள் ஸ்பூன் ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1/2 டேபிள் ஸ்பூன் ( பொடியாக நறுக்கியது)
சோயா சாஸ் -1/4 டீஸ்பூன்
டோமட்டோ கெட்சர் -2 ஸ்பூன்
சில்லி ப்லெக்ஸ், வெள்ளை எள்ளு, ஸ்ப்ரிங் ஆனியன் – சிறிதளவு
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை அவித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அவித்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும். பின்னர் மசித்த உருளைக்கிழங்குடன் சிறிதளவு உப்பு மற்றும் கார்ன்ஃப்ளார் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு தயார் செய்ய வேண்டும். இந்த மாவினை 10 நிமிடத்திற்கு அப்படியே விட்டு பின்னர் கைகளில் சிறிது கான்பிளார் சேர்த்து சப்பாத்தி உருளை போன்று சிறு சிறு உருளைகளாக உருட்டி எடுக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி அடுப்பு டீயை ஹை ஃப்ளேமில் வைத்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதனுடன் ஏற்கனவே தயார் செய்து வைத்த உருளைக்கிழங்கு உருண்டைகளை சேர்க்க வேண்டும். உருளைக்கிழங்கு உருண்டைகள் தண்ணீரில் சேர்த்தவுடன் பாத்திரத்தின் அடியில் தங்கிவிடும். வெந்த உருண்டைகள் தண்ணீரின் மேலே மிதக்கும். அனைத்து உருளைகளும் வெந்த பின்னர் தண்ணீரை வடித்து வேறு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும். இதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை மீடியம் சைஸ்சில் நறுக்கி சேர்க்க வேண்டும். இதேபோன்று குடைமிளகாயையும் மீடியம் சைஸில் நறுக்கி சேர்க்க வேண்டும். அடுப்புத்தீயை லோ ஃபிளேமில் வைத்து இதனுடன் சோயா சாஸ், டோமேட்டோ கெட்சப், சில்லி ப்லேக்ஸ், தேவையான அளவு உப்பு மற்றும் 50ml தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
தண்ணீரில் கரைத்த கான்பிளார் 3 டேபிள்ஸ்பூன் சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் சிறிய பன்னீர் துண்டுகள் மற்றும் உருளைக்கிழங்கு உருளைகளை சேர்த்து அடுப்புத்தீயை ஹை ஃப்ளேமில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும். இவை நன்கு ஒன்றோடு ஒன்று கலந்த பின்னர் அடுப்பை ஆஃப் செய்யவும். இறுதியாக தயார் செய்து வைத்த உருளைக்கிழங்கு பன்னீர் சில்லி மீது வெள்ளை எள்ளு மற்றும் ஸ்ப்ரிங் ஆனியன் தூவி பரிமாறவும். இப்போது சுவையான உருளைக்கிழங்கு பன்னீர் சில்லி தயார்.
இதையும் படிங்க :100 கிராம் பன்னீர் போதும்.. ஹோட்டல் சுவையில் வெஜ் இறால் தொக்கு ரெடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com