Maharashtra | மராட்டிய மண்ணில் பிறந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என உத்தவ் தாக்கரே சிவசேனா தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளது.
Maharashtra | மராட்டிய மண்ணில் பிறந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என உத்தவ் தாக்கரே சிவசேனா தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளது.
Published on: November 7, 2024 at 11:21 pm
Maharashtra | மகாராஷ்டிரா மாநிலத்தில் நவ.20ஆம் சட்டப்பேரவை தேர்தல் நடைபறவுள்ளது. இந்தத் தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.
இந்த நிலையில், உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது. இந்தத் தேர்தல் அறிக்கையில் மராட்டிய மண்ணில் பிறந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மகாராஷ்டிராவில் பிறந்த அனைத்து மாணவர்களுக்கும் இலவச கல்வி
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்படும்
விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் கோதுமை, அரிசி, எண்ணெய், பருப்பு, சர்க்கரை போன்ற ஐந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை சீராக இருக்கும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சிவாஜி மகாராஜின் உத்வேகம் தரும் கோவில் கட்டப்படும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் வரை பணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.
பெண்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி அதிகரிக்கும்.
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும்.
இவை முக்கிய வாக்குறுதிகள் ஆகும். மகாராஷ்டிராவில் ஆளும் ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதனால் போட்டி கடுமையாகியுள்ளது.
இதையும் படிங்க ரூ.3 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி; மகளிருக்கு இலவச பேருந்து: மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி வாக்குறுதி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com