ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல்: இடதுசாரிகள் தனித்துப் போட்டி: காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு!

Jharkhand Assembly Elections 2024 | ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது..

Published on: October 24, 2024 at 5:38 pm

Jharkhand Assembly Elections 2024 | ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) உடன் இணைந்து போட்டியிடாது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இடதுசாரி கட்சிகளின் கூற்றுப்படி, கூட்டணியில் போட்டியிட அவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், “ஹரியானாவிலும் காங்கிரஸ் கட்சி இடதுசாரி கட்சிகளுக்கு எந்த இடத்தையும் கேட்டாலும் கொடுக்கவில்லை” என்றும் இடதுசாரிகள் கூறியுள்ளனர்.

ஜார்க்கண்ட் கூட்டணியில் ஜே.எம்.எம். 44 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ஆர்.ஜே.டி 6 தொகுதிகளிலும் போட்டியிடும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து பேசிய இடதுசாரி தலைவர் ஒருவர், “காங்கிரஸ் தங்களுக்கு போட்டியிட ஓர் இடம் தருவதாக வாக்குறுதி அளித்தது” என்றார்.

மார்க்சிஸ்ட் தனித்துப் போட்டி

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதன்கிழமை 9 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தது. சிபிஐ(எம்) வேட்பாளர்கள் தமர், பஹரகோரா, மந்தர், ஜமா, பாகூர், ஜம்தாரா, மகேஸ்பூர், சிசாய் மற்றும் சத்ரா உள்ளிட்ட ஒன்பது தொகுதிகளில் தேர்தலில் போட்டியிடுவார்கள்.

ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளில், தமர், சிசாய், மகேஸ்பூர், ஜமா மற்றும் மந்தர் உள்ளிட்ட ஐந்து தொகுதிகள் பட்டியல் பழங்குடியினருக்கும் (எஸ்டி) ஒரு இடமும், சத்ரா பட்டியல் சாதியினருக்கும் (எஸ்சி) ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமர், சிசாய், மந்தர், பஹரகோரா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க  : உத்தரப் பிரதேச இடைத்தேர்தல்: பின்வாங்கிய காங்கிரஸ்: சைக்கிள் சின்னத்தில் இந்தியா கூட்டணி போட்டி!

இளைஞர்களின் குரலையும் தமிழ் மொழியையும் பா.ஜ.க ஒடுக்குகிறது.. ராகுல் காந்தி Rahul Gandhi

இளைஞர்களின் குரலையும் தமிழ் மொழியையும் பா.ஜ.க ஒடுக்குகிறது.. ராகுல் காந்தி

Rahul Gandhi : சென்னையில் மாணவர்கள் உடனான சந்திப்பின்போது, இளைஞர்களின் குரலை பா.ஜ.க அடக்குகிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்….

ராகுல் காந்தி வருகை.. சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு.. 15 ஆயிரம் போலீசார் குவிப்பு! Rahul Gandhi Chennai Visit

ராகுல் காந்தி வருகை.. சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு.. 15 ஆயிரம் போலீசார்

Rahul Gandhi Chennai Visit : காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சென்னைக்கு வருகை தருவதை முன்னிட்டு, நகரம் முழுவதும் பல…

தி.மு.க, காங்கிரஸுடன் இணைந்து செயல்படாது.. ஆர்.எஸ் பாரதி R.S. Bharathi

தி.மு.க, காங்கிரஸுடன் இணைந்து செயல்படாது.. ஆர்.எஸ் பாரதி

R.S. Bharathi: திமுகவும் காங்கிரஸும் இணைந்து எந்தவொரு போராட்டத்திலும் அல்லது நிகழ்ச்சியிலும் பங்கேற்காது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்….

போராட்டத்தை நிறுத்த மாட்டோம்.. போலீசாரல் கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி! Rahul Gandhi Vows

போராட்டத்தை நிறுத்த மாட்டோம்.. போலீசாரல் கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி!

Rahul Gandhi Vows : இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என போலீஸாரால் கைது…

கோட்-சூட் அணிந்த விவசாயி.. இணையத்தில் வைரல்! Jharkhand Farmer Goes Viral

கோட்-சூட் அணிந்த விவசாயி.. இணையத்தில் வைரல்!

Jharkhand Farmer Goes Viral: ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி நிஷாந்த் கெர்கெட்டா இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com