Uttar Pradesh | உத்தரப் பிரதேச மாநிலம் டெல்லியை ஒட்டிய காஜியாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு உதவியாளர் சிறுநீரைப் பயன்படுத்தி மாவை பிசையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிராசிங்ஸ் ரிபப்ளிக் சொசைட்டியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம், ஸ்மார்ட்போன் காட்சி மூலமாக வெளியாகி உள்ளது. பணிப்பெண்ணை கையும் களவுமாக பிடிக்க ஸ்மார்போன் மறைமுகமாக வைக்கப்பட்டது. இதில் பணிப்பெண் வசமாக சிக்கினார். அவர், தனது சிறுநீரில் சப்பாத்தி உள்ளிட்ட பொருள்கள் சமைத்து கொடுத்துள்ளார்.
இதனால் வீட்டின் உரிமையாளர் குடும்பத்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் காஜியாபாத் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பணிப்பெண்ணை கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது பெண்ணின் மோசமான செயல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க
Rinku Singh : உத்தரப் பிரதேச அரசு ரிங்கு சிங்கிற்கு புதிய பொறுப்பு வழங்கி கவுரவிக்க உள்ளது….
Keshav Prasad: உலகளாவிய நெருக்கடி நிலை இருக்கும் நேரத்தில் அகிலேஷ் யாதவ் மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பொதுமக்களை தவறாக வழி நடத்துவதாக உத்திர பிரதேச துணை…
Uttar Pradesh: உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹரிஸ் ராணா என்ற இளைஞரை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது….
Noida techie death: நொய்டா தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் ஓட்டி வந்த கார் வாய்க்காலில் சிக்கி உள்ளது….
Uttar Pradesh: உத்தரப் பிரதேசத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை தொடர்ந்து, 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்