Southern Railway | சென்னை கவரைப்பேட்டையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மைசூரு-தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெட்டிகள் தீ பிடித்து எரிந்தன. மேலும், 12 முதல் 13 பெட்டிகள் வரை தடம் புரண்டது. உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
சுமார் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விபத்து காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விபரம்
- சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் எண் 16112 புதுச்சேரி – திருப்பதி ரத்து செய்யப்பட்டது.
- மாலை 4:35 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்ட ரயில் எண் 16203 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டது.
- சனிக்கிழமை பிற்பகல் 2:25 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் எண் 16053 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டது.
- சனிக்கிழமை காலை 10:10 மணிக்கு புறப்பட்ட ரயில் எண் 16054 கொண்ட திருப்பதி – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டது.
- மாலை 6:05 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் எண் 16058 திருப்பதி – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டது.
- பிற்பகல் 2:30 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் எண் 16402 கடப்பா – அரக்கோணம் ரத்து செய்யப்பட்டது.
- கூடுதலாக, விஜயவாடா-சென்ட்ரல் வழித்தடத்தில் பினாகினி எக்ஸ்பிரஸ் இரு திசைகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- மேலும், சூலூர்பேட்டை-நெல்லூர் மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தாம்பரம்- கோயம்புத்தூர் சிறப்பு ரயில் அறிவிப்பு: புறப்படும் நேரம், இடம் செக் பண்ணுங்க!
- ரூ.80 கோடியை கடந்த மண்டாடி பட வசூல்.. பட்டைய கிளப்பும் சூரியின் வசூல் வேட்டை!
Mandaadi Box Office Collections : நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் ரூ.80 கோடிக்கும் மேல் வசூலித்து தியேட்டர்களில் சிறப்பாக ஓடிவருகிறது.
- திருவனந்தபுரம்–தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.. முழு விவரம்!
Special Train Services: திருவனந்தபுரம்–தாம்பரம் சிறப்பு ரயில்கள் சேவை காலம் நீட்டித்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
- குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருட்கள்.. நெஸ்லே மீது எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ 3 வழக்குகள்!
Nestle: குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருட்கள் விவகாரத்தில் Nestle மீது FSSAI 3 வழக்குகள் செய்துள்ளது.
- TVS Apache, Ronin பைக்குகளில் புதிய அப்டேட்கள்.. டி.வி.எஸ் அதிரடி!
TVS Apache: TVS Apache, Ronin பைக்குகளில் புதிய அப்டேட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன; பண்டிகை காலத்தை முன்னிட்டு டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- இந்தியாவுக்கு 100% வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம்.. ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு புதிய கட்டுப்பாடு!
India Faces 100% Tariff Threat : இந்தியாவுக்கு 100% வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்