தாம்பரம்- கோயம்புத்தூர் சிறப்பு ரயில் அறிவிப்பு: புறப்படும் நேரம், இடம் செக் பண்ணுங்க!

Southern Railway | Special Train | தாம்பரம்- கோயம்புத்தூர் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Published on: October 10, 2024 at 6:11 am

Southern Railway | Special Train | ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை, தீபாவளி மற்றும் பிற பண்டிகை காலங்களில் பயணிகளின் கூடுதல் கூட்டத்தை சமாளிக்கும் வகையில், தாம்பரம்-கோவை கோட்டத்தில் வாராந்திர சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நிலையில் சிறப்பு ரயில்களின் அட்டவணையை பார்க்கலாம்.

ரயில் அட்டவணை:

ரயில் எண். 06184/06185 தாம்பரம் – கோயம்புத்தூர் – தாம்பரம் மற்றும் ரயில் எண். 06184 தாம்பரம் – கோயம்புத்தூர் வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் 11, 18, 25 மற்றும் நவம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் 18:00 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

இந்த ரயில் மறுநாள் காலை 8.10 மணிக்கு கோவை சென்றடையும். தொடர்ந்து, ரயில் எண். 06185 கோயம்புத்தூர் – தாம்பரம் வாராந்திர விழா சிறப்பு ரயில் கோவையில் இருந்து அக்டோபர் 13, 20, 27 ஆகிய தேதிகளிலும், நவம்பர் 3, 10, 17, 24 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் 23:45 மணிக்குப் புறப்படும். இந்த ரயில், மறுநாள் மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்தத் தகவல்களை தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com