ஜெய்பீம் மணிகண்டன் மாறுபட்ட நடிப்பில் மக்கள் காவலன். டிச.4 ரிலீஸ்!

Makkal Kaavalan Release Date: டிசம்பர் 4-ம் தேதி வெளியாகிறது மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ திரைப்படம்.

Published on: November 27, 2026 at 1:03 pm

சென்னை, நவ.27, 2026: நடிகர் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள ‘மக்கள் காவலன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனை முன்னிட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மையமாகக் கொண்ட புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தை சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ளார். பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

சாதாரண மனிதர் ஒருவர் கண்ணியத்துடன் வாழ விரும்பும் நிலையில், ஊழல் நிறைந்த அமைப்பால் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்கிறார். இதையடுத்து அநீதிக்கு அடிபணிவதா அல்லது எதிர்த்துப் போராடுவதா என்ற சூழலுக்குத் தள்ளப்படும் அவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

மணிகண்டனுடன் வாகை சந்திரசேகர், திவ்யா ஸ்ரீபாதா, ஏ. வெங்கடேஷ், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமூகப் பிரச்சினைகளையும், நீதிக்கான போராட்டத்தையும் பேசும் இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான பிரச்சினையால் டிசம்பர் 4 வெளியீடு உறுதியற்ற நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ‘புஷ்பா 2’ வசூல் சாதனையை முறியடித்த ‘ராமாயணா’! 21 நாட்களில் ரூ.1,755 கோடி வசூல்!

டிஸ்னி வரலாற்றில் புதிய சாதனை படைத்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிரெய்லர்.. அடேங்கப்பா.. 24 மணி நேரத்தில் 56.3 கோடி பார்வைகளா!
Avengers Doomsday Trailer Record

டிஸ்னி வரலாற்றில் புதிய சாதனை படைத்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிரெய்லர்.. அடேங்கப்பா.. 24

ரஜினி ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்.. மீண்டும் திரைக்கு வரும் ‘முரட்டுக்காளை’ திரைப்படம்!
Rajinikanth Murattu Kaalai Re-Release

ரஜினி ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்.. மீண்டும் திரைக்கு வரும் ‘முரட்டுக்காளை’ திரைப்படம்!

அந்தப் பெண்ணின் நடிப்பை இன்னும் மறக்க முடியவில்லை.. ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் பாராட்டிய அந்த தமிழ் நடிகை யார் தெரியுமா?
Tom Hanks Praises Sachana

அந்தப் பெண்ணின் நடிப்பை இன்னும் மறக்க முடியவில்லை.. ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com