பிரபலமான குடும்பப் பெயரால் விமர்சனம்; திறமையால் மரியாதை பெற்ற மகன்: சேவாக் பெருமிதம்!

Aryavir Sehwag Cricket Achievement: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், தனது மகன் ஆர்யவீர் சேவாக் கிரிக்கெட்டில் சாதித்து அனைவரின் மரியாதையையும் பெற்றுள்ளதாகப் பாராட்டியுள்ளார்.

Published on: November 20, 2026 at 12:19 pm

புதுடெல்லி, நவ.20, 2026: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், தனது மகன் ஆர்யவீர் சேவாக் கிரிக்கெட்டில் சாதித்து அனைவரின் மரியாதையையும் பெற்றுள்ளதாகப் பாராட்டியுள்ளார். பிரபலமான குடும்பப் பெயரைக் கொண்டிருப்பதால் ஆரம்பத்தில் அவர் பல்வேறு விமர்சனங்களைச் சந்திக்க வேண்டியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய ஆர்யவீர், 5 போட்டிகளில் மொத்தம் 361 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதைப் பெற்றார். இதில் ஒரு சதம், 3 அரைசதங்கள் அடங்கும்.

பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 61 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். இறுதிப்போட்டியில் இந்திய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

இதுகுறித்து பேசிய சேவாக், மரியாதை பெற வேண்டுமென்றால் பெரிய அளவில் ரன்கள் குவிக்க வேண்டும் என மகனிடம் தொடர்ந்து அறிவுறுத்தி வந்ததாகக் கூறினார். தற்போது தனது திறமையை உலகுக்கு நிரூபித்துள்ள ஆர்யவீர், இனி தொடர்ந்து சிறப்பாக விளையாடி ரன்கள் குவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : அஸ்வின், படேலுக்குப் பிறகு தரமான ஆஃப் ஸ்பின்னர் இல்லாதது ஆச்சரியம்.. தீபக் படேல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com