தீபாவளிக்கு காலை 6–7 மணி, இரவு 7–8 மணி மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. தமிழக அரசு அறிவிப்பு!

Diwali Firecracker Timings: தீபாவளிக்கு காலை 6–7 மணி, இரவு 7–8 மணி மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

Published on: November 5, 2026 at 1:21 pm

சென்னை, நவ.5, 2026: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நேரக் கட்டுப்பாட்டை தமிழக அரசு அறிவித்துள்ளது.

குறைந்த அளவு மாசு ஏற்படுத்தும், குறைந்த ஒலி எழுப்பும் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிக ஒலி எழுப்பும் தொடர் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள அமைதிப் பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது. அதேபோல், குடிசைகள் மற்றும் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளுக்கு அருகிலும் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மூலம் மாவட்ட நிர்வாகம் அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் பொதுவான இடங்களில் குழுவாகப் பட்டாசு வெடிப்பதை அரசு ஊக்குவித்துள்ளது. இதற்காகப் பள்ளிகள், கல்லூரிகள், சுற்றுச்சூழல் மன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க : விசாரணைக்கு ஒத்துழைப்பதால் ஜாமின் வழங்க வேண்டும்.. அன்பில் மகேஷ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com