மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி.. மலேசியாவுடன் முதல் போட்டியில் மோதும் இந்தியா!

India vs Malaysia Hockey Match: மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில், மலேசியாவுடன் முதல் போட்டியில் இந்தியா மோதுகிறது.

Published on: November 5, 2026 at 12:31 pm

Updated on: November 5, 2026 at 12:32 pm

போபால், நவ.5, 2026: மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில், இந்திய அணி தனது முதல் போட்டியில் மலேசியாவை எதிர்கொள்கிறது. ஆறு அணிகள் பங்கேற்கும் இத்தொடர் நவம்பர் 19ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் தொடங்குகிறது. போட்டிகள் நாது பார்கேடாவில் உள்ள சர்வதேச விளையாட்டு வளாகத்தின் புதிய ஹாக்கி மைதானத்தில் நடைபெற உள்ளன.

இந்தியா, ஜப்பான், சீனா, மலேசியா, தாய்லாந்து, தென் கொரியா ஆகிய ஆறு அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. கடந்த மாதம் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் வென்ற பிறகு, இந்திய மகளிர் அணி பங்கேற்கும் முதல் சர்வதேசத் தொடராக இது அமைகிறது.

இந்திய அணி நவம்பர் 19ஆம் தேதி மலேசியாவை எதிர்கொள்கிறது. தொடர்ந்து நவம்பர் 21ஆம் தேதி தென் கொரியா, 22ஆம் தேதி தாய்லாந்து, 24ஆம் தேதி சீனா, 25ஆம் தேதி ஜப்பான் அணிகளுடன் மோதுகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும் வகையில் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். நவம்பர் 27ஆம் தேதி அரையிறுதிப் போட்டிகளும், நவம்பர் 28ஆம் தேதி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி மற்றும் இறுதிப்போட்டியும் நடைபெற உள்ளன. 2016, 2023, 2024ஆம் ஆண்டுகளில் பட்டம் வென்ற இந்திய அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.

இதையும் படிங்க : சென்னை ஓபன் டென்னிஸ்.. ஃபார்முக்கு திரும்பிய ராபின் மாண்ட்கோமெரி!

155 ரன்களுடன் மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய ஜெய்ஸ்வால்.. நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டி டிரா!
Yashasvi Jaiswal

155 ரன்களுடன் மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய ஜெய்ஸ்வால்.. நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com