ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படத்தில் இணைந்தார் ஸ்ரீலீலா.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Sreeleela in Dharman: ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படத்தில் இணைந்துள்ளார் ஸ்ரீலீலா. இதனை, படக்குழு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

Published on: November 5, 2026 at 12:10 pm

சென்னை, நவ.5, 2026: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ளார். இதனைப் படத்தைத் தயாரிக்கும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் சமூக வலைதளத்தில் அறிமுக வீடியோ வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஸ்ரீலீலாவை வரவேற்று படக்குழு வெளியிட்டுள்ள பதிவில், அவரிடம் தனித்துவமான ஈர்ப்பும் உற்சாகமும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஸ்ரீலீலாவை வரவேற்றுள்ளார். ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீலீலா இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.

இப்படத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா, சிம்ரன், யோகி பாபு, ராஷி கண்ணா உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இதில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகப் படத்தின் அறிமுக போஸ்டர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரீலீலாவின் வருகை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : மூக்குத்தி அம்மனாக நயன்தாரா.. காலை 6 மணிக்கே முதல் காட்சி.. முதல்வர் விஜய்க்கு நன்றி!

‘பதாய் ஹோ’ தமிழ் ரீமேக்கில் தந்தை கதாபாத்திரத்தில் அஜித்.. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தகவல்!
Ajith Kumar Badhaai Ho Remake

‘பதாய் ஹோ’ தமிழ் ரீமேக்கில் தந்தை கதாபாத்திரத்தில் அஜித்.. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com